- Advertisement -
Homeபொழுதுபோக்குகேப்டன் மில்லருக்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ்குமாருக்கு துரோகம் செய்த நடிகர் தனுஷ் - தமிழ் சினிமாவில்...

கேப்டன் மில்லருக்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ்குமாருக்கு துரோகம் செய்த நடிகர் தனுஷ் – தமிழ் சினிமாவில் இது என்ன துரோகம் சீசனா?

- Advertisement -

நடிகர் தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கிய கேப்டன் மில்லர் படம், வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் பிரமோ நிகழ்ச்சி, கடந்த 3ம் தேதி சென்னை நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் தனுஷ், தனது மகன்களுடன் கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஐஸ்வர்யாவிடம் ரசிகர் ஒருவர் அத்துமீறி நடந்துக்கொண்டது, சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாருக்கு, நடிகர் தனுஷ் துரோகம் செய்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த தகவலை மூத்த சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

பிஸ்மி கூறுகையில், ஆரம்பத்தில் தனுஷ், ஜிவி பிரகாஷ்குமார் நல்ல நண்பர்களாக இருந்தது உண்மைதான். ஆனால் ஒரு கட்டத்தில் தனது உறவினர் அனிரூத் வளர வேண்டும் என தனுஷ் என ஆசைப்பட்டார். அதற்காக ஜிவி பிரகாஷை இசையமைக்க அணுகிய பல இயக்குநர்களை, தயாரிப்பாளர்களை அனிரூத்தை நீங்க பயன்படுத்திக்கலாமே, என ரூட்டை மாற்றிவிட்டார்.

இதனால் பல தயாரிப்பாளர் அட்வான்ஸ் கொடுத்து ஜிவி பிரகாஷ்குமார் கம்போஸிங் போகிற நேரத்தில், அவரது வாய்ப்புகள் பல பறிபோனது. இந்த உண்மையை புரிந்துக்கொண்ட ஜிவி பிரகாஷ், தனுஷின் துரோகத்தை கண்டித்து, அவரை தாக்கி தனது வலைதள பக்கத்தில் பதிவுகள் போட்ட காலமும் உண்டு.

ஆனால் ஒரு கட்டத்தில் நன்கு வளர்ந்த பிறகு, தனுஷை அனிரூத் கழட்டி விட்டுவிட்டார். மீண்டும் வேறு வழியின்றி ஜிவி பிரகாஷ் குமாரை அணுக வேண்டிய நிலை தனுஷூக்கு ஏற்பட்டதால், இயக்குநர் வெற்றிமாறன் மூலம் சமரசம் பேசினார். அதன்பின்னர்தான் தனுஷ் படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார் என்று கூறியுள்ளார். இசையமைப்பாளர் இமானுக்கு, சிவகார்த்திகேயன் செய்த துரோகம் குறித்த சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தற்போது மற்றொரு துரோகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சற்று முன்