- Advertisement -
Homeபொழுதுபோக்குஹரா பட டீசர் வெளியீட்டு விழாவில் டென்ஷன் ஆன நடிகர் மோகன்; விஜய் படத்தில் நடித்தது...

ஹரா பட டீசர் வெளியீட்டு விழாவில் டென்ஷன் ஆன நடிகர் மோகன்; விஜய் படத்தில் நடித்தது குறித்து கேள்வி கேட்டதால் ஆவேசம் – என்ன இப்படி பேசிட்டாரு…

- Advertisement -

நடிகர் மோகன், தமிழ் சினிமாவில் வெள்ளி விழா நாயகனாக கடந்த 1980களில் வலம் வந்தவர். அவர் நடித்த பல படங்கள் இன்றும் ரசிக்கும்படியான சிறந்த படங்களாக ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக மெல்லத் திறந்தது கதவு, இதய கோவில், நூறாவது நாள், மௌன ராகம், கோபுரங்கள் சாய்வதில்லை, பயணங்கள் முடிவதில்லை, குங்குமச்சிமிழ் என உள்ளிட்ட பல படங்களை சொல்லலாம்.

ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு, நடிகர் மோகனுக்கு பட வாய்ப்புகள் வெகுவாக குறைந்து போனது. படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லாமல் நடிப்பதையும் குறைத்துக் கொண்டார். அதற்கு முக்கிய காரணம், படத்தில் நடித்தால் அவர் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம் பிடித்தது தான். மற்ற நடிகர்கள் அந்த வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக் கொண்டனர்.

- Advertisement -

அவரை அணணன், மாமா போன்ற மற்ற கேரக்டரில் நடிக்க அழைப்பு அழைத்த போது, இல்லை நான் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்ற ஒரு பிடிவாதமாக இருந்ததால் பல படங்களில் நடிக்கிற வாய்ப்பை அவர் இழந்தார். எனினும் அவர் சில படங்களை டைரக்ட் செய்தார். சொந்தமாகவும் தயாரித்தார். ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை. அதனால் சினிமாவை விட்டு பல ஆண்டுகளாக விலகி இருந்தார்.

அவர் இப்போது மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். அந்த வகையில் நடிகர் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் நடிகர் மைக் மோகன் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு வில்லன் கேரக்டர் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக அதிகபட்சமாக நடிகர் மோகன் இரண்டு கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்று இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அவர் சினிமா பயணத்தில் அவர் அதிகபட்சமாக வாங்கிய சம்பளம் இதுதான். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் நடிகர் மோகன் நிறைய படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் விஜய் ஸ்ரீ டைரக்ட் செய்த ஹரா என்ற படத்தில் நடிகர் மைக் மோகன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த படத்தின் நாயகன் என்ற முறையில் மோகன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து செய்தியாளர்கள் மத்தியில் மோகன் பகிர்ந்து கொண்டார்.

விஜய் படத்தில், மோகன் நடித்துவரும் கேரக்டர் குறித்து கேட்கப்பட்டது. ஹீரோவாக நடித்த நீங்கள் இப்படி விஜய் படத்தில் சைடு ரோடில் நடிக்கிறீர்களே, என்றும் கேள்வி எழுப்பினார். இதனால் கடுப்பான நடிகர் மோகன், நான் முதல்முதலில் நடித்த கோகிலா படத்தில் கமல்ஹாசன் தான் ஹீரோ. அடுத்து நான் நடித்த மூடுபனி படத்தில் பிரதாப் போத்தன் தான் ஹீரோ. அப்போதே கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆக நடித்திருக்கிறேன். நான் ஒரு நடிகன். நல்ல கதாபாத்திரம் என்றால் நடிப்பேன் என்று ஆவேசமாக பதிலளித்தார்.

- Advertisement -

சற்று முன்