- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் ஒரு சம்பவம்... நாகார்ஜூனாவை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய தனுஷ்... இவங்கள திட்டி என்ன பிரயோஜனம்......

மீண்டும் ஒரு சம்பவம்… நாகார்ஜூனாவை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய தனுஷ்… இவங்கள திட்டி என்ன பிரயோஜனம்… முதல்ல ரசிகர்கள்ல சொல்லணும்…

- Advertisement -

இங்கு மிகவும் பிரபலமாவதற்கு ஏற்ற துறை அரசியலும் சினிமாவும் தான். அரசியலை விட சினிமாவில் உள்ள பிரபலங்களை இங்குள்ளவர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் உள்ள நட்சத்திரங்களை, ஏதோ வானில் இருந்து குதித்தவர்களைப் போல நினைத்து இங்கு ரசிகர்கள் கொண்டாடுவது காண்பதற்கு வியப்பாகவே இருக்கிறது.

 

அவர்களின் பேனருக்கு பால் ஊற்றுவது, சூடம் ஏற்றுவது, கையெடுத்து கும்பிடுவது என ஒரு நடிகருக்கு ரசிகர்கள் இத்தனை காரியத்தை செய்ய வேண்டுமா? என்று பலரும் இங்கு கேள்வி எழுப்பி வருகின்றனர். கொண்டாட்டம் என்று இருந்தாலும் ஓரளவுக்கு அது கட்டுப்பாடோடு இருந்தால்தான் எதுவும் ரசிக்கும்படி இருக்கும் என்பது சிலரின் கருத்தாக இங்கு இருக்கிறது.

 

அதிலும் குறிப்பாக தங்கள் அபிமான நட்சத்திரங்களை நேரில் பார்க்கும்போது, ரசிகர்கள் அவர்களுடன் பேச முயற்சிப்பதும், செல்பி எடுத்துக் கொள்வதும் வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் இது இங்குள்ள பெரிய நட்சத்திரங்களுக்கு பெரும்பாலும் பிடிப்பதில்லை. மேடையில் ரசிகர்கள் தான் எங்கள் வாழ்வு என்று அவர்கள் கூறிக் கொண்டாலும், நிஜ வாழ்க்கையில் அவர்களை எள்ளளவும் மதிக்காமல் தான் செல்கின்றனர்.

 

இதற்கு எடுத்துக்காட்டாக அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை கூறலாம். விமான நிலையத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மற்றும் தனுஷ் ஆகியோர் சென்று கொண்டிருக்க ரசிகர் ஒருவர் திடீரென நாகர்ஜுனாவின் அருகில் சென்று தொட்டுப் பேச முயற்சித்தார். ஆனால் அவர் ஏதோ தாக்க வந்தது போல நினைத்து, அருகில் இருந்த பாதுகாவலர் அவரை தூக்கி வீசினார்.

 

ஆனால் இதனை நாகார்ஜூனா கண்டுகொள்ளவே இல்லை. தனுஷோ பார்த்தும் பார்க்காதது போல சென்றார். இணையத்தில் இந்த விவகாரம் பெரும் பிரச்சனையை ஏற்படுத்த, சுதாரித்துக் கொண்ட நாகார்ஜுன், சம்பவத்திற்கு மன்னிப்பு கூறினார். இப்போதுதான் இது தனது கவனத்திற்கு வந்ததாக கூறிக் குண்டை தூக்கிப் போட்ட அவர், எதிர்காலத்தில் இது நடக்காதபடி முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வதாக தெரிவித்தார். இந்த நிலையில் விமான நிலையத்திற்கு சென்ற போதும் மீண்டும் அந்த ரசிகரை அழைத்து அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

 

இப்படியாக இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது. இதனிடையே, மும்பையில் குபேரா படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்க, அங்குள்ள கடற்கரைக்கு சென்ற தனுஷிற்காக ரசிகர்கள் சிலர் காத்திருந்தனர். நடிகர் வந்தபோது அவர்கள் புகைப்படம் எடுக்க முயற்சிக்க, அருகில் இருந்த பாதுகாவலரோ அவர்களை தள்ளிவிட்டார். ஆனால் இதை தனுஷ் கண்டு கொள்ளவே இல்லை. இந்த வீடியோவை இணையத்தில் பார்த்தவர்கள், நடிகரை வசை பாடி வருகின்றனர். அது மட்டுமல்ல உதாசீனப்படுத்தும் ஒருவரை ஏன் இப்படி ரசிகர்கள் தாங்கி பிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி விடுகின்றனர்.

சற்று முன்