- Advertisement -
Homeபொழுதுபோக்குசுதா கொங்கரா இயக்கத்தில் துருவ் விக்ரம் படம் தள்ளிப் போக அந்த பிரபல இயக்குனர்தான் காரணமா?...

சுதா கொங்கரா இயக்கத்தில் துருவ் விக்ரம் படம் தள்ளிப் போக அந்த பிரபல இயக்குனர்தான் காரணமா? – பல நாட்களுக்கு பின் வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

- Advertisement -

சுதா கொங்கரா தமிழ்ப்பட இயக்குனர்களில் மிக முக்கியமானவராக இருக்கிறார். நடிகர் ஸ்ரீகாந்த் நடித்த துரோகி அவர் இயக்கிய முதல் படம். அந்த படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. தொடர்ந்து இறுதிச்சுற்று படத்தை இயக்கினார். மாதவன், ரித்திகா சிங் நடித்த இந்த படம் பெரிய அளவில் வெற்றியை பெற்றது.

அதைத்தொடர்ந்து சூர்யா, அபர்ணா முரளி நடித்த சூரரைப் போற்றுவோம் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் தமிழ் சினிமாவில் மிக முக்கிய ஒரு படமாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் சூர்யா நடிப்பில் புறநானூறு என்ற படத்தை, சுதா கொங்கரா இயக்குவதாக இருந்தது. ஆனால் கதையில் சூர்யா குறுக்கீடு செய்ததால், அந்த படம் டிராப் ஆகி விட்டது.

- Advertisement -

எனினும் அந்த கதையை படமாக்கும் தீவிர முயற்சியில் இயக்குனர் சுதா கொங்கரா இருந்து வருகிறார். இந்த படத்தில் தனுஷ் அல்லது சிவகார்த்திகேயன் நடிக்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால் இந்த படத்தில் நாயகனாக யார் நடித்தாலும் அந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை, வெற்றியை பெறும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் பல ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்தி எதிர்ப்பு சம்பவங்களை மையப்படுத்திய கதையாக இது உள்ளது.

ஆனால் இதற்கெல்லாம் முன்பாக, நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் ஒரு படத்தை இயக்குவதுதான் சுதா கொங்கராவின் திட்டமாக இருந்தது. இத முழுக்க முழுக்க காதல் கதை என்றும் சொல்லப்பட்டது. வழக்கமாக ஆக்சன் படங்களை இயக்கும் சுதா கொங்கரா இந்த படத்தில் இளம் காதலர்களின் கதையை மையப்படுத்தி எடுக்க உள்ளார் என்றும் கூறப்பட்டது.

- Advertisement -

ஆனால், இந்த படத்துக்கு முன்னதாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் படத்தில் நடிக்க துருவ் விக்ரம் கமிட் ஆகி, படப்பிடிப்பு துவங்கி விட்டது. அதனால் இந்த படத்துக்கு கால்ஷீட் முன்னபின்னதாக இருக்கலாம். திடீரென கூடுதலான நாட்கள் கால்ஷீட் தேவைப்படலாம் என்பதால், இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை வேறு எந்த படத்திலும் கமிட் ஆக வேண்டாம் என்று இயக்குனர் மாரி செல்வராஜ், துருவ் விக்ரமிடம் கேட்டுக்கொண்டு உள்ளார்.

அதனால்தான், சுதா கொங்கரா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்க வேண்டிய படம், தள்ளி போடப்பட்டுள்ளது. இதற்கிடையே சிவகார்த்திகேயன் அல்லது தனுஷ் நடிப்பில் புறநானூறு படத்தை இயக்கி விடலாம் என்ற முடிவுக்கு சுதா கொங்கரா வந்திருக்கிறார், மாரி செல்வராஜின் பைசன் படப்பிடிப்பு முடிந்த பிறகு, சுதா கொங்கரா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்க வாய்ப்பு உள்ளது. அப்போது அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்