- Advertisement -
Homeபொழுதுபோக்குஜவான் படம் ஆஸ்கர் விருதுவரை செல்லும்... அடிச்சுவிட்ட அட்லி... எப்பா போதும்டா சாமி என புலம்பும்...

ஜவான் படம் ஆஸ்கர் விருதுவரை செல்லும்… அடிச்சுவிட்ட அட்லி… எப்பா போதும்டா சாமி என புலம்பும் ரசிகர்கள்…

- Advertisement -

ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி, விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மூன்று வெற்றி திரைப்படங்களை கொடுத்தார். 2019 ஆம் ஆண்டு பிகில் திரைப்படம் வெளியான நிலையில், அதன் பிறகு அட்லி படத்தின் அறிவிப்பு வராமலேயே இருந்தது.

இந்த நிலையில், யாருமே எதிர்பாக்காத நேரத்தில் பாலிவுட்டிற்கு சென்ற அட்லி, அங்கு கிங் கானாக இருக்கும் ஷாருக்கானுடன் இணைந்தார். இந்த படத்தை ஷாருக்கானின் மனைவி கௌரியை தயாரிக்க, தமிழிலிருந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபுவை பாலிவுட்டிற்கு அட்லி அழைத்துச் சென்றார்.

- Advertisement -

இதன் சூட்டிங் பணிகளில் சுமக்கும் ஏற்பட்டதால், காலதாமதமாக ஜவான் திரைப்படம் வெளியானது. சாதாரண கதையை இது கொண்டிருந்தாலும், பாலிவுட்டிற்கு புதுமையாக இருந்ததால் படம் வசூலில் சக்கை போடு போட்டது. கிட்டத்தட்ட 800 கோடி ரூபாய்க்கு மேல் படம் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலிவுட்டில் மிகப்பெரிய பாய்ச்சலை ஜவான் நிகழ்த்தினாலும், தமிழில் பெரிய அளவு வரவேற்பை பெறவில்லை. இதற்கு முக்கிய காரணம் அட்லி என்னும் வித்தை கற்ற இயக்குனர் தான் என்று பலரும் இணையத்தில் வறுத்தெடுக்க ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் பிற படங்களில் இருந்து முக்கிய காட்சிகளை சுட்டு வந்த அட்லி, இந்த முறை அவரது படத்திலிருந்து காட்சிகளை உருவி இருப்பதாக பலர் சாடினர்.

- Advertisement -

ஒரு படம் இரண்டு படம் அல்ல ஏராளமான படத்தின் சாயல்கள் ஜவானில் இருப்பதாகவும், ரசிகர்களை எந்த அளவு கேவலமாக அவர் புரிந்து வைத்திருக்கிறார் என்றும் பலர் குறை கூறி வந்தனர். சர்தார், ரமணா, ஆரம்பம், கத்தி என ஒரு படத்தைக் கூட அவர் விட்டு வைக்கவில்லை என்று பேச்சுகள் எழுதன. இது ஒரு பக்கம் இருந்தாலும் படம் வசூல் மழையை பொழிந்து இருப்பதால், உற்சாகத்தில் இருக்கும் அட்லி அடுத்ததாக தெலுங்கு பக்கம் செல்கிறார்.

இந்த முறை அவர் அல்லு அர்ஜுனை வைத்து இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் பேட்டி அளித்துள்ள அவர், எல்லா இடங்களும் சரியாக இருந்தால் ஜவான் ஆஸ்கர் விருதுக்கு செல்லும். சினிமாவில் பணிபுரியும் ஒவ்வொருவரின் பார்வையும் தேசிய விருது, ஆஸ்கர், கோல்டன் கிளப் விருதுகள் மீதுதான் விழும். அதனால் நிச்சயமாக ஜவான் திரைப்படம் ஆஸ்கருக்கு செல்லும் என விரும்புகிறேன். இந்தப் படத்தை ஆஸ்கருக்கு எடுத்துச் செல்வது குறித்து ஷாருக்கானிடம் நான் கேட்பேன் என்று தெரிவித்துள்ளார். அட்லியின் இந்த பேச்சால் கடுப்பாகி இருக்கும் ரசிகர்கள், எப்பா போதும்டா சாமி என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்