- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்கள் ஏன் அந்த மாதிரி படங்களை எடுப்பதில்லை? நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் பாலா சொன்ன...

நீங்கள் ஏன் அந்த மாதிரி படங்களை எடுப்பதில்லை? நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் பாலா சொன்ன நச் பதில்!

- Advertisement -

இயக்குனர் பாலா தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் ஒரு படைப்பாளியாக இருக்கிறார். சேது படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பாலா, 25 ஆண்டுகளில் 10க்கும் குறைவான படங்களே இயக்கி உள்ளார். ஆனால் ஒவ்வொரு படமும் 10 படங்களுக்கு சமமான கதையம்சம் கொண்ட சிறந்த படங்களாக இருந்திருக்கின்றன.

பாலா இயக்கிய முதல் படம் சேது, நடிகர் விக்ரமுக்கும் மிக முக்கியமான படமாக அவரது திரை பயணத்தை துவங்கி வைத்த படமாக இருந்தது. தொடர்ந்து நந்தா நான் கடவுள் பிதாமகன் பரதேசி அவன் இவன் தாரை தப்பட்டை ஆகிய படங்களை இயக்கிய பாலா, வணங்கான் படத்தை இயக்கினார்.

நடிகர் சூர்யா கமிட் ஆகி சில வாரங்கள் இந்த படத்தில் நடித்தார். பிறகு பாலாவுக்கும் சூர்யாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சூர்யா இந்த படத்தை விட்டு வெளியேறினார். பிறகு சூர்யா கேரக்டரில் நடிகர் அருண் விஜய் நடித்திருந்தார். வணங்கான் படம் கடந்த ஜனவரி 10ம் தேதி வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது.

தமிழ் சினிமாவில் சமீப காலமாக சாதி பேசும் படங்கள், உரிமை பேசும் படங்கள் அதிகளவில் வெளியாகின்றன. கடும் விமர்சனங்களை சந்தித்தாலும் இந்த படம் பெரிய வெற்றியை பெறுகின்றன. குறிப்பாக பா ரஞ்சித் மாரி செல்வராஜ் போன்றவர்கள் இயக்கும் படங்களில் இந்த சாதி பிரச்னைகள் பெரிய அளவில் பேசப்படுகின்றன.

குறிப்பாக மெட்ராஸ் காலா கபாலி தங்கலான் படங்களில் இயக்குனர் பா ரஞ்சித்தும் பரியேறும் பெருமாள் கர்ணன் மாமன்னன் வாழை படங்களில் இயக்குனர் மாரி செல்வராஜூம் சாதி பிரச்னைகளை மையமாக்கிய கதைக்களத்தில் படங்களை தந்திருந்தனர். ஒரு தரப்பினர் இதுபோன்ற படங்கள் அவசியமில்லை என்று கூறினாலும், தொடர்ந்து இத்தகைய படங்கள் வெளிவருகின்றன.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் பாலாவிடம் சாதி பேசும் படங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இயக்குனர் பாலா கூறியதாவது, அப்படி என்று ஒன்று இருந்தால் தானே அதைப்பற்றி கருத்து சொல்ல முடியும்? இருக்குதுன்னு சொல்லி இவங்களே சொல்லிக்கிட்டா. நானும் அப்படி ஒரு படம் எடுத்து நெருப்பை கிளறி விட விரும்பவில்லை. அது தானாக அடங்கட்டும் என்று பாலா பதில் கூறியிருக்கிறார்.

சற்று முன்