- Advertisement -
Homeபொழுதுபோக்குபாஜக எம்பி கங்கனா ரெனாவத்துக்கு விழுந்த அடி; கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய பிரபல டைரக்டர்...

பாஜக எம்பி கங்கனா ரெனாவத்துக்கு விழுந்த அடி; கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய பிரபல டைரக்டர் – ஒரு பெண் தாக்கப்படுவது சரியா பாஸ்?

- Advertisement -

நடிகை கங்கனா ரெனாவத், இந்தி சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் தாம் தூம், தலைவி, சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இந்த 3 படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவராக இருக்கிறார் கங்கனா ரெனாவத்.

அவர் நடித்த 3 படங்களில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்தில், ஜெயலலிதா கேரக்டரில் மிக அற்புதமாக நடித்திருந்தார். இதில் எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த சாமியும், சசிகலா கேரக்டரில் பூர்ணாவும், ஆம் எம் வீரப்பன் கேரக்டரில் சமுத்திரக்கனியும் நடித்திருந்தனர். இந்த படம் ரசிக்கும்படியாக இருந்தது.

- Advertisement -

இப்போது கங்கனா ரெனாவத், இமாச்சல பிரதேசத்தில் மாண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். நேற்று, பஞ்சாப் மாநிலம் சண்டிகர் விமான நிலையத்துக்கு வந்த அவரிடம், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஐஎஸ்எப் போலீஸ் குல்விந்தர் கவுர் என்பவர், கங்கனா ரெனாவத்தை கண்டபடி திட்டி வாக்குவாதம் செய்திருக்கிறார்,

ஒரு கட்டத்தில் மிகவும் ஆவேசமடைந்த பெண் போலீஸ் குல்விந்தர் கவுர், கங்கனா ரெனாவத்தை கன்னத்தில் ஓங்கி அறைந்திருக்கிறார். இதில் அவரது கைவிரல்கள், கங்கனா ரெனாவத்தின் கன்னத்தில் பதிந்தது. ஆளுங்கட்சி பாஜக எம்பியை, அதுவும் பிரபலமான ஒரு நடிகையை பெண் போலீஸ்காரர், விமான நிலையத்தில், பொது இடத்தில் பல பேர் முன்னிலையில் அறைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

விவசாயிகள் போராட்டம் குறித்து, கங்கனா ரெனாவத் இழிவாக பேசிய கோபத்தில், அந்த பெண் போலீஸ் அவரை தாக்கியதாக அவரே பேசிய வீடியோவும் வைரலாகி வருகிறது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் இந்த சம்பவத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கங்கனா ரெனாவத்தை தாக்கிய பெண் போலீஸ் குல்விந்தர் கவுர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு, விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், டைரக்டர் சேரன் இதுகுறித்து தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். அதில், இந்த பெண்மணியின் கோபத்தில் நியாயம் இருப்பதாக பார்க்கிறேன். அந்த அடி நடிகைக்கானதல்ல. விவசாயிகளின் உணர்வு தெரியாமல் பேசிய அந்த வார்த்தைகளுக்கு பின்னும் இந்த கவர்ச்சிக்கு ஓட்டு விழுகிறது என்றால், மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார். ஹேட்ஸ் ஆப் என்று பாராட்டியிருக்கிறார். ஒரு பெண்ணுக்கு எதிரான வன்முறையை, ஒரு பெண்ணே நடத்தியிருக்கும் போது, அதை தட்டிக் கேட்காமல் பாராட்டிய டைரக்டர் சேரனுக்கு, கடுமையான எதிர் விமர்சனங்கள் வந்துக்கொண்டிருக்கின்றன.

- Advertisement -

சற்று முன்