வருகிற மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் இந்திய தேர்தல் ஆணையம் இப்போது சுறுசுறுப்பாக செயல்பட துவங்கி விட்டது. இன்னும் சில வாரங்களில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்பதில் எந்த சந்தேககமும் இல்லை.
அதே நேரத்தில் தமிழக சட்டசபை தேர்தலில் இந்த முறை நடிகர் விஜயின் தவெக கட்சி பிரவேசம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயமாக இது பல விதங்களில் அரசியல் களத்தில் மாறுதலை கொண்டு வரும். குறிப்பாக திமுக அதிமுக பாஜக வாக்குகளில் கண்டிப்பாக ஒரு மாறுபட்ட விளைவை ஏற்படுத்தும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே இயக்குனர் ஒருவர் ரசிகர்களுக்கு வாக்குறுதி தந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் என்ற படத்தை இயக்கியவர் சிபி சக்கரவர்த்தி. இளம் இயக்குனர். அவர் தனது 2வது படமாக நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்தை டைரக்ட் செய்ய கமிட் ஆகி இருக்கிறார்.
முதல் படத்தை மட்டுமே இயக்கிய சிபி சக்ரவர்த்தி 2வது படத்திலேயே சூப்பர் ஸ்டாரை ஹீரோவாக வைத்து படம் டைரக்ட் செய்வது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு படம் மட்டுமே இயக்கிய அவர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை அவர் மாஸ் ஹிட் படமாக கொடுப்பாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளராக கமல்ஹாசன் இருக்கிறார்.
இதுகுறித்து சமீபத்தில் வித் லவ் படத்தின் பிரமோ நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சிபி சக்ரவர்த்தி கூறியதாவது, தலைவர் 173 படம் அறிவிப்பு வெளியான பிறகு நான் கலந்துக்கொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுதான். ரஜினி படத்தை நான் இயக்குவதாக அறிவிப்பு வெளியான போது ஏராளமான பாராட்டுகளும் வாழ்த்துக்களும் எங்கிருந்தோ எல்லாம் என்னை தேடி வந்தன.
இந்த நிகழ்ச்சி மூலமாக நான் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் உறுதியாக கொடுக்கும் வாக்குறுதி இதுதான். தலைவர் 173 படத்தை பார்த்துவிட்டு தியேட்டரில் இருந்து நீங்கள் முழு திருப்தியுடன் வெளியேறுவீர்கள். இதை மீண்டும் சொல்கிறேன். இதுதான் என்னுடைய வாக்குறுதி என்று சிபி சக்ரவர்த்தி அந்த நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார். தேர்தலுக்கு முன்பே அவர் வாக்குறுதி தந்தது சினிமா ரசிகர்களிடம் ஆச்சரியத்தை தந்துள்ளது.





