- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படத்தில் இருக்க வேண்டிய அந்த விஷயங்கள்…. நடிகர் விஜய் சொன்ன கண்டிஷன்களை போட்டுடைத்த இயக்குனர்...

ஜனநாயகன் படத்தில் இருக்க வேண்டிய அந்த விஷயங்கள்…. நடிகர் விஜய் சொன்ன கண்டிஷன்களை போட்டுடைத்த இயக்குனர் எச் வினோத்!

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். இந்த படத்தை தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 69வது படத்துக்கு ஜனநாயகன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் குடியரசு தினத்தன்று படத்தின் டைட்டிலுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அன்று மாலை 4 மணிக்கு செகண்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான பகவந் கேசரி படம்தான், ரீமேக் செய்யப்பட்டு ஜனநாயகன் என்ற பெயரில் உருவாகி வருவதாக நீண்ட நாட்களாக ஒரு தகவல் இருந்து வருகிறது. அதே நேரத்தில் இந்த படத்தை தயாரிக்கும் கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம், பகவந் கேசரி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் தெலுங்கில் வெளியான பகவந் கேசரி படத்தின் ரீமேக் தான் ஜனநாயகன் என்று இதுவரை எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் விஜயின் கெட்டப் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில காட்சிகள், பகவந் கேசரி படத்தின் தழுவல்தான் ஜனநாயகன் என்று கூறப்படுகிறது.

இந்த சூழலில் விஜய் 69 படப்பிடிப்பு துவங்கும் முன்பே சில கண்டிஷன்களை, இயக்குனர் எச் வினோத்திடம் விஜய் கூறியிருக்கிறார். அதுபற்றி இயக்குனர் எச் வினோத் கூறியதாவது, விஜயின் கடைசி படம் ஜனநாயகன் 200 சதவீதம் அவருடைய படமாக மட்டுமே இருக்கும்.

மக்கள் அனைவருக்கும் பிடிக்கும் வகையிலான ஒரு கமர்சியல் படமாக இந்த படம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த படத்தை துவங்குவதற்கு முன்பே விஜய் என்னிடம் ஒரு டிமாண்ட் வைத்தார். அது என்னவென்றால் என் படத்தை அனைத்து வயதினரும் மற்றும் அரசியல் கட்சியினரும் விரும்பி பார்ப்பார்கள்.

அதனால் இந்த படத்தில் யாரையும் தாக்கும் வகையில் காட்சிகளை எடுக்காமல் லைட்டான விஷயங்களை மட்டும் வைத்து, படத்தை எடுக்குமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார் என்று இயக்குனர் எச் வினோத் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். இப்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்