- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்றைய இயக்குனர்கள் சிலர் அதை பயன்படுத்தறேன்னு சொல்லிட்டு கதையில் கோட்டை விட்டுடறாங்க - ஓபனாக சொன்ன...

இன்றைய இயக்குனர்கள் சிலர் அதை பயன்படுத்தறேன்னு சொல்லிட்டு கதையில் கோட்டை விட்டுடறாங்க – ஓபனாக சொன்ன திரைக்கதை மன்னன் இயக்குனர் கே பாக்யராஜ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் தனது யதார்த்தமான திரைக்கதைகளால் படங்களால் கொண்டாடப்பட்டவர் இயக்குனர் கே பாக்யராஜ். இந்திய அளவில் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்கு அவர் சொந்தக்காரர். இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் சீடராக தொழில் கற்றவர். குருவான என்னையே மிஞ்சி விட்டார் என்றும் கூற பாரதிராஜா கே பாக்யராஜை ஒரு விழாவில் புகழ்ந்திருக்கிறார்.

கே பாக்யராஜ் இயக்கத்தில் உருவான படங்கள் எல்லாமே யதார்த்தமான கதைக்களத்தில் இருக்கும். அதில் வரும் கேரக்டர்கள் எல்லாமே நமக்கு பரிச்சயமானவர்களாக தோன்றும். அப்படிப்பட்ட ஒரு நெருக்கமான உணர்வை தரும் படங்களை அவர் தந்திருப்பார். அதனால்தான் அந்த படங்களை ரசிகர்கள் கொண்டாடினர்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய மறைந்த இயக்குனர் கே பாக்யராஜ் இன்றைய திரைப்படங்கள் குறித்து கூறியதாவது, இன்றைக்கும் நல்ல நல்ல படங்கள் வந்துகிட்டு இருக்கு. இப்போ நிறைய விஞ்ஞான முன்னேற்றங்கள் வந்ததுனால அதை யூஸ் பண்ணி யூஸ் பண்ணி நிறைய படங்கள் பண்ணீட்டு இருக்காங்க.

ஆனால் நிறைய பேர் இதுல பண்ற தப்பு என்னன்னா அந்த விஞ்ஞான முன்னேற்றங்களை மட்டுமே எடுத்துக்கிட்டு பண்ணனும்ன்னு சொல்லிட்டு நிறைய செலவு பண்ணி படம் பண்றது, நிறைய நாட்களுக்கு படப்பிடிப்பு பண்றது, பான் இந்தியா படங்களாக பண்றது,

இப்படி பண்ற விஷயங்களில் கடைசியில் கதையில் கொஞ்சம் கோட்டை விட்டுறாங்க. ஏன்னா மகாபாரத்தில் இல்லாத கேரக்டர்கள் இல்லை. எத்தனையோ கேரக்டர்கள் இருக்குது, ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு கதை சொல்லிட்டாங்க. இத்தனை கேரக்டர்கள் வெச்சு பண்ணின மகாபாரதத்துல நமக்கு எதாவது குழப்பம் வருதா?

இப்போ ஊருக்கு ஒருத்தரா பிடிச்சு போடறேன்னு சொல்லிட்டு அவசரமா பண்ணினால் டைரக்டர்களுக்கு எல்லாம் கிரியேட் பண்ணனும் இது பண்ணனும் அவங்களுக்கும் டைம் எடுத்துக்கறது இல்லை. இவங்களும் ஹீரோஸ் அவங்களுக்கு டைம் கொடுக்காமல் இப்படி எல்லாம் பண்ணும்போது என்னாகுது என்றால் அவசரமா பான் இந்தியா படம் இவ்வளவு கோடி வருது இவ்வளவு கோடி வருதுன்னு பார்த்தால் கடைசியில் முதல் நாள் 2வது வசூலுக்கு பிறகு 4 நாள் கழித்து பார்த்தால் அது வேற மாதிரி ஆகி விடுகிறது என்று இயக்குனர் கே பாக்யராஜ் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

சற்று முன்