பீட்சா படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்பராஜ். தொடர்ந்து ஜிகர்தண்டா இறைவி பேட்ட மஹான் ஜகமே தந்திரம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்களை இயக்கினார். சமீபத்தில் அவரது இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய படங்களில் கமர்ஷியலாக பெரிய வெற்றியை பெற்ற படம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படம்தான். இந்த படத்தில் சிம்ரன் திரிஷா மாளவிகா மோகனன் இயக்குனர் மகேந்திரன் குரு சோமசுந்தரம் பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் பேட்ட படத்தில் நடித்திருந்தனர்.
எந்த ஹீரோவுக்கு கதை எழுதினாலும் நடிகர் ரஜினிகாந்தை மனதில் வைத்தே கதை எழுதும் வழக்கம் கொண்டவர் கார்த்திக் சுப்பராஜ். ஏனெனில் அவர் ரஜினியின் தீவிர ரசிகர். சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ படமும் ரஜினியை மனதில் வைத்தே எழுதப்பட்ட நிலையில், கடைசியில் சூர்யாவுக்காக அதில் காதல் காட்சிகளை கொண்டு வந்ததாக அவரே வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
ரெட்ரோ படம் வெளியாகி 4 நாட்களான நிலையில் ரூ. 70 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. ஆனால் விமர்சன ரீதியாக இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. ரெட்ரோ படம் பார்த்தவர்களுக்கு கங்குவா படம் அதை விட நன்றாக இருக்கும் என்று சிலர் கலாய்த்து வருகின்றனர். ரெட்ரோ படம் சூர்யாவுக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்பதே கசப்பான உண்மை.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற ரெட்ரோ படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறியதாவது, ரெட்ரோ படத்தில் இருந்து இனிமேல் ஆன்லைனில் வரும் விமர்சனங்களை படிக்கவே கூடாது என்பதை கற்றுக் கொண்டேன். தியேட்டர்களில் ரசிகர்களின் உணர்ச்சியை பார்த்து படம் எப்படி வந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த படத்துக்கு நாங்கள் கிட்டத்தட்ட 300 பேர் வேலை செய்துள்ளோம். ஒரு சிலர் வேண்டுமென்றே படக்குழுவின் மகிழ்ச்சியை கெடுக்க எதிர்மறையாக விமர்சனங்களை எழுதுகின்றனர். இனிமேல் ஆன்லைனில் வரும் விமர்சனங்களை படிக்கவே கூடாது என்று முடிவு செய்துள்ளேன் என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கோபமாக கூறியிருக்கிறார்.





