- Advertisement -
Homeபொழுதுபோக்குகமல் சார் தான் எனக்கு அதை கற்றுக் கொடுத்தார் - 29 படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில்...

கமல் சார் தான் எனக்கு அதை கற்றுக் கொடுத்தார் – 29 படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் ஓபன் ஸ்டேட்மென்ட் தந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மேயாத மான் என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரத்னகுமார். ஆடை குளுகுளு ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் இப்போது 29 என்ற படத்தை டைரக்ட் செய்து இருக்கிறார். விது பிரீத்தி அஷ்ராணி நடித்துள்ள இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் லோகேஷ் கனகராஜ் ஜீஸ்குவாட் நிறுவனமும் இணைந்து தயாரித்து உள்ளன.

இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். வரும் மே 8ம் தேதி 29 படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது, 29 படத்தின் இயக்குனர் ரத்னகுமார் ரொம்ப நாட்களாக சக போட்டியாளனாகவே இருந்திருக்கிறான்.

- Advertisement -

நானும் ரத்னாவும் முதல் படம் பண்ணுவதற்காக தெருத் தெருவாக சுத்தி இருக்கிறோம். அந்த சமயத்தில் தான் பீட்சா படம் ரிலீஸ் ஆனது. அந்தப் படம் தான் எங்களைப் போன்றவர்களுக்கு கதவை திறந்து வைத்தது. இன்றைக்கு இருக்கும் நிறைய இயக்குனர்களுக்கும் அந்த படம் கதவை திறந்து வைத்தது. பீட்சா படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜ் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் நிறைய ஷார்ட் பிலிம்களை ரிலீஸ் செய்தார்.

அப்படித்தான் ரத்னாவின் முதல் ஷார்ட் பிலிம் மது ரிலீஸ் ஆனது. என்னுடைய அவியல் குறும்படமும் அப்படித்தான் ரிலீஸ் ஆனது. அப்படி பார்த்தால் கார்த்திக் சுப்பராஜ் ரத்னாவை மட்டும் அறிமுகம் செய்யவில்லை. என்னையும் அவர் தான் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அன்றைக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரவு கொடுத்தது எல்லாம் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனம் தான்.

- Advertisement -

இன்றைக்கு அதே ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்துடன் இணைந்து ரத்னகுமாரின் 29 படத்தை தயாரிக்கும் அளவுக்கு எனக்கான ஒரு இடத்தை கொடுத்த மக்களுக்கு நன்றி. நாம் வளரும்போது நம்முடன் இருப்பவர்களையும் வளர்த்து விட வேண்டும். வாய்ப்பு இருக்கும்போதே அதை செய்துவிட வேண்டும். இதற்கு இன்ஸ்பிரேசன் கமல் சார்தான்.

அவரிடம் இருந்துதான் இதை நான் கற்றுக் கொண்டேன். சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவுக்கே கொடுக்க வேண்டும் என்பதையும் கமல் சாரிடம் தான் கற்றுக் கொண்டேன். என்னுடைய படங்களுக்கு ஆதரவு கொடுத்த மாதிரி என்னுடைய தயாரிப்பில் வெளியாக இருக்கும் இந்த படத்துக்கும் ஆதரவு கொடுங்கள் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்