2018 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத புதுமையான களத்தில், எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சாதிய ஏற்றத்தாழ்வுகளை நம் கண் முன்னே நிறுத்தி, சாட்டையடி கொடுத்தது. ஹீரோவாக கதிர் நடிக்க, ஆனந்தி, யோகி பாபு, மாரிமுத்து, லிங்கேஷ் என அனைவருமே தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்ததால், யதார்த்த சினிமாவின் நீரோட்டமாய் இந்த படம் அமைந்தது. பரியேறும் பெருமாள் என்னும் திரைப்படத்தின் மூலம் பலராலும் கவனிக்கப்பட்ட மாரி செல்வராஜ், சமூகம் சார்ந்த படத்தை எடுத்ததற்காக கொண்டாடப்பட்டார்.

மாரி செல்வராஜின் இயக்கத்தை பார்த்த நடிகர் தனுஷ், அவருக்கு தனது படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார். எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஒரு கிராமத்தில், பேருந்து நிற்காததால் மக்கள் ஏற்படும் அவலத்தையும், அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலையும் தனுசை வைத்து கர்ணன் திரைப்படத்தின் மூலம் துணிச்சலாக கூறினார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
பொடியன் குளம் எனும் கிராமத்தில் கலவரம் வெடிப்பது போலவும், போலீசாரின் அடக்குமுறைகளையும் கண்முன்னே காட்சிப்படுத்திய மாரி செல்வராஜ், கோலிவுட்டில் இரண்டாவது முறையாக பரபரப்பாக பேசப்பட்டார். இந்த படத்தைத் தொடர்ந்து, பா ரஞ்சித் தயாரிப்பில் விக்ரம் மகன் துருவ் விக்ரமுடன் அவர் இணைவதாய் அறிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மனத்தி கணேசன் என்னும் கபடி வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில், கபடி விளையாட்டுக்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டார் துருவ் விக்ரம். இந்த நேரத்தில், உதயநிதி ஸ்டாலின் தனது திரையுலக பயணத்தில் கடைசி படத்தை இயக்குமாறு மாரி செல்வராஜிடம் கூற, அடுத்த சில மாதங்களில் உருவானது மாமன்னன்.
கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. நாற்காலி அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், கதையின் நாயகனாக வடிவேலு நடிக்க, வீரம் கொண்ட இளைஞராய் அதிவீரன் என்று கதாபாத்திரத்தில் உதயநிதி நடித்தார். ரத்னவேலு கதாபாத்திரத்தில் கண்முன்னே பகத் பாசில் வாழ்ந்தார். படத்தில் இடம்பெற்ற அனைவரும் கச்சிதமாக நடித்ததால், வேறொரு தளத்திற்கு சென்ற இந்த திரைப்படம் இன்று வரை கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. 35 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் 70 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
காதலும் தத்துவமும் நிறைந்த பாடல்களை பாடக்கூடியவராக மாமன்னனை நான் கண்டுணர்ந்த பாடலும் பயணமும் இந்த நொடி தான் 🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
நன்றி #Vadivelu Sir ❤️❤️#Maamannan #MaamannanBlockbuster #1onNetflix @arrahman @Udhaystalin #FahadhFaasil @KeerthyOfficial @RedGiantMovies_… pic.twitter.com/vQFkmMCajT
— Mari Selvaraj (@mari_selvaraj) August 2, 2023
தற்போது நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலும் மாமன்னன் ட்ரெண்டிங்கில் இருக்க, இயக்குனர் மாரி செல்வராஜ் ட்விட்டரில் வடிவேலு பாடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். ஞாயிறு என்பது கண்ணாக என்னும் பாடலை வடிவேலு மெய் மறந்து பாட, காதலும் தத்துவமும் நிறைந்த பாடல்களை பாடக்கூடியவராக மாமன்னனை நான் கண்டுணர்ந்த பாடலும் பயணமும் இந்த நொடி தான் இன்று எனப் பதிவிட்டிருக்கும் மாரி செல்வராஜ், வடிவேலுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.





