- Advertisement -
Homeபொழுதுபோக்குவடிவேலு ஹிட் பாடலை திரையில் பாட கமிட் ஆன இயக்குனர் மிஷ்கின், ஏற்கனவே அவர் பல...

வடிவேலு ஹிட் பாடலை திரையில் பாட கமிட் ஆன இயக்குனர் மிஷ்கின், ஏற்கனவே அவர் பல பாடல்களை பாடியிருக்கிறாரா? வாய் பிளந்த ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் வடிவேலு காமெடி நடிப்பில் மட்டுமல்ல குணச்சித்திர நடிப்பிலும் தனிமுத்திரை பதிக்கும் சிறந்த கலைஞர். குறிப்பாக சேரன் இயக்கிய பொற்காலம் படத்தில் முரளியுடன் சில காட்சிகளில் நடித்த வடிவேலு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதே போல் மாமன்னன் படத்திலும் அவரது குணச்சித்திர நடிப்பு பெரிய வரவேற்பை பெற்றது.

நடிப்பில் மட்டுமின்றி சொந்த குரலில் பாடுவதிலும் நடிகர் வடிவேலு சிறந்து விளங்குபவர். பல ஹிட் பாடல்களை அவர் தனது சொந்த குரலில் பாடி ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார். குறிப்பாக எட்டணா இருந்தா எட்டூருக்கு என் பாட்டு கேக்கும் வாடி பொட்டப்புள்ள வெளியே ரயிலு ரயிலு புல்லட் ரயிலு போய்யா உன் மூஞ்சியில என பல பாடல்களை அவர் பாடியுள்ளார்.

சினிமாவில் சொந்தக்குரலில் பாடும் நடிகர்கள் மிக குறைவுதான். குறிப்பாக கமல்ஹாசன் விஜய் நவரச நாயகன் கார்த்திக் வடிவேலு போன்ற ஒரு சிலர் மட்டுமே சொந்தக் குரலில் பல பாடல்களை பாடியிருக்கின்றனர். அந்த வரிசையில் இயக்குனர் மிஷ்கினும் ஒரு பாடகர் என்பது பலரும் அறியாத விஷயம்.

இயக்குனர் மிஷ்கின் அவர் இயக்கிய முகமூடி என்ற படத்தில் நாட்டுல நம்ம வீட்டுல என்ற பாடலை அவரே பாடியிருப்பார். அதே போல் அஞ்சாதே படத்தில் கண்ணதாசன் காரைக்குடி பேரை சொல்லி ஊத்திக்குடி என்ற பாடலை சொந்த குரலில் பாடியதும் மிஷ்கின்தான். அவர் ஒரு இசையமைப்பாளர் என்பது பலரும் அறியாத விஷயம்.

இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் ஒரு பாடலை பாட கமிட் செய்யப்பட்டு உள்ளார். நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ் இப்போது லவ்வோ லவ்வு என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் ஏற்னவே நடிகர் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகமானவர். இந்த படம் பவிஷ் நடிப்பில் வெளியாகும் 2வது படமாகும்.

இந்த படத்தில்தான் இயக்குனர் மிஷ்கின் சொந்த குரலில் ஒரு பாட்டு பாடுகிறார். அந்த பாடல் நடிகர் வடிவேலு, காலம் மாறிப் போச்சு படத்தில் குடிபோதையில் ஆடிப்பாடும் வாடி பொட்டப்புள்ளே வெளியே என் வாலிபத்தை நோகடிச்ச கிளியே என்ற பாடல்தான். இதை ரீமிக்ஸ் இசையில் இயக்குனர் மிஷ்கின் பாட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்