- Advertisement -
Homeபொழுதுபோக்குமகனே என்றுதான் அவனை நான் அழைப்பேன், அவனும் என்னை அப்பா என்றுதான் அழைப்பான் - பிரபல...

மகனே என்றுதான் அவனை நான் அழைப்பேன், அவனும் என்னை அப்பா என்றுதான் அழைப்பான் – பிரபல நடிகர் குறித்து பேசிய இயக்குனர் மிஷ்கின்

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் கவனம் பெற்ற ஒரு படைப்பாளியாக இருப்பவர் இயக்குனர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி படத்தில் இயக்குனராக அறிமுகமான மிஷ்கின் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்தார். அஞ்சாதே சைக்கோ துப்பறிவாளன் போன்ற அவரது படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற படங்களாக இருந்தன. அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த டிரெயின் படம் ரிலீஸாக உள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த படம் துப்பறிவாளன், மிகப்பெரிய வெற்றிப் படமாக இருந்தது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்பு கிடைத்த நிலையில், துப்பறிவாளன் 2 படத்தை மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்தார். லண்டனில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடந்த நிலையில் மிஷ்கின், விஷால் இடையே சண்டை ஏற்பட்டு படம் அப்படியே நின்று போனது.

- Advertisement -

இதையடுத்து விஷால் மிஷ்கின் இடையே கடும் பகை ஏற்பட்டது. இருவரும் பகிரங்கமாக ஒருவரை ஒருவர் மிகவும் மோசமாக விமர்சித்தனர். மேடைகளில் ஒருமையில் மிஷ்கின், விஷால் குறித்து தரக்குறைவாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் துப்பறிவாளன் படம் உருவான காலகட்டத்தில் மிஷ்கினும் விஷாலும் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர்.

இதுகுறித்து ஒரு நேர்காணலில் இயக்குனர் மிஷ்கின் கூறியதாவது, நான் விஷால் நடித்த படங்கள் எதுவுமே பார்த்ததில்லை. ஏனென்றால் விஷால் படம் பார்த்தால் அந்த மாதிரியே எடுத்துவிடுவேன் என்பதால் அதை தவிர்த்தேன். விஷால் என்னிடம் அன்பாக பழகியது பண்பாக பழகியது பாசமாக பழகியது எல்லாமே உண்மை. நானும் அந்த விஷயத்தில் கிட்டத்தட்ட பேய் பிடித்தவன்தான்.

- Advertisement -

அதனால் நானும் அதற்கு மேலாக விஷாலிடம் அன்பாக இருந்தேன். அன்பை காட்டினேன். சொல்லப் போனால் என்னை விஷால் அப்பா என்று கூப்பிடுவான், நான் அவனை மகனே என்று கூப்பிடுவேன். கண்ணம்மா என்று உதயை கூப்பிடுவேன். செல்லம்மாடா என்று விஷாலை கூப்பிடுவேன். தினமும் அவன் என் வீட்டில் இருப்பான். அவனை அந்த 2 ஆண்டுகளில் நான் சந்திக்காத நாட்களே இல்லை.

ஒருநாள் என்னை நேரில் சந்தித்தால், மறுநாளில் போனில் பேசி விடுவான். இந்த அறையில்தான் இருப்பான். என்னுடன் இருப்பான். என் மகளுடன் இருப்பான். என் நண்பர்களுடன் இருப்பான். அவன் என் நண்பன் கிடையாது. அதை விட எனக்கு ரொம்ப க்ளோஸா என் வாழ்க்கையில் இருந்தான் என்று இயக்குனர் மிஷ்கின் அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்