தமிழ் சினிமாவில் பல வெள்ளிவிழா படங்களை இயக்கியவர் ஆர் சுந்தர்ராஜன். பல படங்களில் நடித்தும் இருக்கிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் ஆர் சுந்தர்ராஜன் கூறியதாவது, நான் 1951ம் ஆண்டில் கோயம்புத்தூரில் பிறந்தேன். அப்போது காலரா பிளாக் நோய் பரவிய காலகட்டம். நிறைய பேர் காலரா பிளாக் நோயால் இறந்தனர். அந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் நான் பிறந்தேன்.
அப்போது வந்து நான் 4 மாத குழந்தை. அம்மா இடுப்புல வெச்சிக்கிட்டு இருக்காங்க. கோயம்புத்தூர்ல கிச்சுல வெச்சிட்டு இருக்கேன்னு சொல்வாங்க. அப்போ ரேசன் கடைக்கு எங்கம்மா என்னை தூக்கிட்டு போறாங்க. அப்போ ரேசன் கடையில் எங்கம்மா 4 மணி நேரம் வரிசையில் காத்திருக்காங்க. அப்போ பஞ்சத்துல எலிக்கறியை தின்ன காலம் அது.
அப்போ எங்க அம்மாகிட்ட உங்க வீட்டுல யார் யார் எல்லாம் இருக்காங்க? அவங்க பேர் என்ன என்றெல்லாம் அந்த ரேசன் கடைக்காரர் விசாரிக்கிறார். எங்க அப்பா அம்மா என் அண்ணன் பேர் எல்லாம் எழுதியாச்சு. என் பேர் என்னான்னு கேட்கறார். எங்கம்மா இன்னும் பேர் வைக்கலேன்னு சொல்றாங்க.
அப்போ எல்லாம் குழந்தை பிறந்தால் 7 மாதம் கழிச்சு மொட்டை அடிச்சு காதுகுத்தி தாய் மாமன் மடியில் உட்கார வெச்சு பேர் வைக்கிறதுதான் வழக்கம். அதனால் வந்து இன்னும் பேர் வைக்கலைங்க என்று எங்க அம்மா சொல்லியிருக்கிறார். பேர் வைக்கலைன்னு சொன்னா எப்படீம்மா என்று அந்த அதிகாரி கோபப்பட்டு பேசியிருக்கிறார்.
எங்க அம்மாவுக்கும் அந்த அதிகாரிக்கும் சண்டை. இந்த பிரச்னையில் ரேசன் கார்டே கொடுக்கலேன்னாலும் எனக்கு வேண்டாம் என்று எங்கம்மா சொல்லி இருக்காங்க. தாய்மாமன் மடியில் உட்கார வெச்சு மொட்டை அடிச்சதுக்கு அப்புறம்தான் பேர் வைப்போம்ன்னு எங்கம்மா சொல்லியிருக்காங்க.
அப்படி இப்படின்னு பேசி கடையில் அந்த அதிகாரியே, உங்க பையன் பேரு சுந்தர்ராஜன்னு எழுதிடறேன். யாராச்சும் உங்க வீட்ல சுந்தர்ராஜன் இருக்கானான்னு கேட்டா இருக்கான்னு சொல்லிடுங்க என்று அந்த ரேசன் கடைக்காரன் வெச்ச பேரு எனக்கு சுந்தர்ராஜன். ஆனா இப்பவெல்லாம் நியூமராலஜி பார்த்து பேர் வைக்கிறாங்க என்று இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் அந்த நிகழ்ச்சியில் கலகலப்பாக பேசியிருக்கிறார்.





