- Advertisement -
Homeபொழுதுபோக்குஏழு கடல் ஏழு மலை படத்தின் கதை இதுதான் - மொத்த கதையையும் அப்படியே சொன்ன...

ஏழு கடல் ஏழு மலை படத்தின் கதை இதுதான் – மொத்த கதையையும் அப்படியே சொன்ன இயக்குனர் ராம், ஆனாலும் படத்தை பார்க்க கதை தூண்டுதே?

- Advertisement -

இயக்குனர் ராம் இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள படம் ஏழு கடல் ஏழுமலை. வருகிற அக்டோபர் 1ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது. நடிகர்கள் நிவின் பாலி சூரி மற்றும் நடிகை அஞ்சலி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். வி புரடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் கதை குறித்து ஏராளமான தகவல்கள் வெளியானது. தற்போது இந்த படம் வெளியாக சில நாட்களே உள்ள நிலையில் ஏழு கடல் ஏழு மலை படத்தின் கதை இதுதான் என்று படத்தின் இயக்குனர் ராம் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இது ஒரு ஃபேண்டஸி கலந்த காதல் கதை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

- Advertisement -

ஏழுகடல் ஏழுமலை படம் குறித்து படத்தின் இயக்குனர் ராம் கூறியதாவது, ஏழு கடல் ஏழு மலை படத்தின் கதை மிக எளிதானது. குழந்தைகளுக்கு கதை சொல்லும் போது ஏழு கடல் ஏழு மலை கடந்து கதாநாயகன் தனது காதலியை தேடி செல்வான் என்று கூறுவோம். இந்த படத்தின் கதையும் அதுதான். படத்தின் பிரதான கதாபாத்திரம் நிவின் பாலி. படத்தில் அவருக்கு பெயரே கிடையாது. நான்காயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர் சாகாவரம் பெற்றவராக வருகிறார்.

சாகாவரம் பெற்ற அவரை இயக்குவது சாகாவரம் பெற்ற அவருடைய காதல்தான். அவர் பல நூற்றாண்டுகளாக ஒரு பெண்ணை தேடிக் கொண்டிருக்கிறார். நிஜ வாழ்க்கையில் அந்த பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு தீபாவளி இரவில் ரயிலில் முன்பதிவு செய்யாத கடைசி பெட்டியில் தூங்கிக் கொண்டிருக்கிறார். தூக்கத்தில் ஒரு கனவு வருகிறது. அதில் அந்த பெண் வந்து விடுகிறாள்.

- Advertisement -

மற்றொரு கதாபாத்திரம் சூரி அவருக்கும் பெயர் கிடையாது. எங்கோ ஒரு பாலைவனத்தில் எட்டு ஆண்டுகளாக தன் குடும்பத்துக்காக உழைத்து பொருளீட்டிக்கொண்டு இரண்டு சூட்கேஸ் நிறைய பொருள்களையும் மகிழ்ச்சியையும் தூக்கிக் கொண்டு தனது சொந்த ஊருக்கு திரும்புகிறார். ரயில் பெட்டியில் ஏறும் அவர் தூங்கிக் கொண்டிருக்கிற சாகாவரம் பெற்றவரை எழுப்பி விடுகிறார் இவரை எழுப்பும்போது தான் அந்த பெண்ணை நிவின்பாலி கனவில் கண்டுபிடித்து இருக்கிறார்.

அதனால் தூங்கிக் கொண்டிருக்கும் புலியை எழுப்பிய நிலைக்கு ஆளாகிறார் சூரி. இருவருக்கும் இடையில் நடக்கும் பயணம் பேச்சு முரண்பாடுதான் படத்தின் கதை. அந்த ரயில் பெட்டியில் உள்ள ஒரு எலி இருவரையும் பிரிக்கிறது இணைக்கிறது என்பது படத்தின் இன்னொரு சுவாரசியம். அந்த காதலன் தன் காதலியை கண்டுபிடித்தானா இல்லையா? சூரி பத்திரமாக வீடு போய் சேர்ந்தாரா இல்லையா? இவர்கள் இடையில் மாட்டிக் கொண்ட எலி என்னவானது என்பதே ஏழு கடல் ஏழு மலை படத்தின் கதைச்சுருக்கம் என்று இயக்குனர் ராம் கூறியிருக்கிறார். தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்