- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயேசு மாதிரி அவர் முடி வைத்திருந்தார், அஞ்சலி என் படங்களில் தொடர்ந்து நடிப்பது ஏன்? -...

இயேசு மாதிரி அவர் முடி வைத்திருந்தார், அஞ்சலி என் படங்களில் தொடர்ந்து நடிப்பது ஏன்? – ஏழு கடல் ஏழுமலை படம் குறித்து பேசிய இயக்குனர் ராம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ராம். அவர் இயக்கிய கற்றது தமிழ் படம் நல்ல வரவேற்பை பெற்றது. தங்கமீன்கள் பேரன்பு தரமணி பறந்து போ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம், இப்போது ஏழுமலை ஏழுகடல் என்ற படத்தை இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி மற்றும் நடிகர் சூரி நடிகை அஞ்சலி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படம் வித்யாசமான ஒரு கதைக்களத்தில் உருவாகியுள்ளது. அதாவது படம் முழுவதும் ரயிலில் நடப்பது போல் எடுக்கப்பட்டுள்ளது. இதில் எலி ஒன்றும் முக்கிய கேரக்டராக வருகிறது.

- Advertisement -

இந்த படத்தின் கதை என்பது, சாகாவரம் பெற்ற ஒருவர் தன் கனவில் வரும் காதலியை தேடிக்கொண்டு இருக்கிறார். அந்த கனவில் வரும் காதலி யார் என்று ரயிலில் பயணம் செய்யும்போது கண்டறிகிறார். அப்போது அவர் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் அந்த ரயிலில் ஏறும் நடிகர் சூரி அவரை எழுப்பி விடுகிறார்.

அப்படி 4 ஆயிரம் ஆண்டுகளாக தன் காதலியை தேடிக்கொண்டிருக்கும் நிலையில் அந்த காதலி யார் என கண்டறியும் நேரத்தில் தூக்கத்தில் இருந்த அவரை சூரி எழுப்பி விடுவது பெரிய பிரச்னையாக மாறிவிடுகிறது. அதன்பிறகு அவர்களுக்குள் நடக்கும் சம்பவங்கள்தான் இந்த படத்தின் கதைக்களமாக உள்ளதாக இயக்குனர் ராம் கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரைப்பட இயக்குனர் ராம் கூறியதாவது, நிவின் பாலி என்னுடைய நீண்ட கால நண்பர். பேரன்பு படம் பார்த்துவிட்டு நாம் ஒரு படம் பண்ணலாம் என்றார். இந்த கதை உருவானபோது அவர் நிறைய தாடியும் முடியும் வைத்து வளர்த்திருந்தார். அப்போது ஒரு சாயலில் இயேசு போலவே இருந்தார்.

அதே மாதிரி தான் சூரியும் பேரன்பு படம் பார்த்துவிட்டு உங்க கூட ஒரு படம் பண்ணனும் சார் என்றார். சினிமாவில் அஞ்சலியை நான் தான் அறிமுகம் செய்தேன் என்பதற்காக மட்டுமல்ல. என் குடும்பத்தில் ஒருவர் அஞ்சலி. எப்பொழுது எந்த கதாபாத்திரத்திற்கு அழைத்தாலும் அவர் சம்மதிப்பார் என்று ஒரு நேர்காணலில் இயக்குனர் ராம் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்