- Advertisement -
Homeபொழுதுபோக்குமலையாள படங்களுக்கு தரும் ஆதரவை தமிழில் வரும் நல்ல படங்களுக்கும் கொடுங்கள் - நொந்து போன...

மலையாள படங்களுக்கு தரும் ஆதரவை தமிழில் வரும் நல்ல படங்களுக்கும் கொடுங்கள் – நொந்து போன புதுமுக இயக்குநர் ஆவேசம்

- Advertisement -

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான படம் மஞ்சும்மல் பாய்ஸ். சிதம்பரம் டைரக்ட் செய்த இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி வெளியானது. படம் ரிலீஸ் ஆன 7 நாட்களில் மொத்தம் 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஆனால் இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ. 5 கோடிதான். இன்னும் சில தினங்களில் மஞ்சும்மல் பாய்ஸ் வசூல் 100 கோடி ரூபாயை எட்டிவிடும் என்று சொல்லப்படுகிறது.

கொடைக்கானல் மலையில் உள்ள குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்துக்கு, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பு அமோகமாக கிடைத்துள்ளது. அதனால் தமிழ்நாட்டில் மஞ்சும்மல் பாய்ஸ் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக படம் ஓடுகிறது. இந்த படத்துக்காக பிரமோ எதுவுமே செய்யாத நிலையில், படம் பார்த்த ரசிகர்களே பிரமோ செய்து படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்று விட்டனர்.

- Advertisement -

இந்நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை விட 10 மடங்கு சிறந்த படமான பைரி படம் சரியாக ஓடவில்லை. இந்த படத்துக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் ஆதரவு தரவில்லை என, அந்த படத்தின் இயக்குநர் ஜான் கிளாடி வருத்தம் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் நடக்கும் புறா பந்தயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், டைரக்டரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்த அனைவருமே புதுமுகங்கள்தான்.

இந்த படம் ரிலீஸ் செய்யப்படுவதற்கு முன்பே படத்தை பார்த்த டைரக்டர்கள் கே. பாக்யராஜ், சேரன், லெனின் பாரதி போன்றவர்கள், இயக்குநர் ஜான் கிளாடியை பாராட்டி, படம் பிரமாதமாக இருப்பதாக கூறியுள்ளனர். குறிப்பாக படத்தின் திரைக்கதை வேற லெவலில் இருப்பதாகவும் இயக்குநரிடம் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

அதனால் பைரி படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில், 120 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யபப்ட்ட இந்த படம், இரண்டாவது வாரமே 14 தியேட்டர்களில் தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. அதற்கு காரணம் அந்த தியேட்டர்களில் எல்லாம் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை திரையிட்டுள்ளனர். மஞ்சும்மல் பாய்ஸ் சிறந்த படம் என்றாலும், அந்த படத்தை விட பைரி 10 மடங்கு சிறப்பான, மிகவும் தரமான படம் என்றும் இயக்குனர் ஜான் கிளாடி கூறியிருக்கிறார்.

பக்கத்து மாநிலத்தில் இருந்து வரும் நல்ல படங்களை பாராட்டுவது, வரவேற்பது, ஆதரவு தருவது தவறு இல்லை. ஆனால் தமிழிலேயே வரும் நல்ல படங்களுக்கும் அதே ஆதரவு, பாராட்டு, வரவேற்பு கிடைத்தால்தான் அடுத்தடுத்த நல்ல படைப்புகளை இயக்குநர்களால் தர முடியும். என்றாலும் பைரி படத்தின் 2ம் பாகம் விரைவில் வெளியாகும். அந்த படத்துக்கு ரசிகர்களின் ஆதரவு பெரிய அளவில் இருக்கும் என்றும், பைரி படத்தின் இயக்குநர் ஜான் கிளாடி கூறியிருக்கிறார். பைரி என்ற தமிழ் படத்துக்கு மஞ்சும்மல் பாய்ஸ் என்ற மலையாளப் படத்தின் வருகையும், வெற்றியும், கடும் பாதிப்பை தந்திருப்பதை இயக்குநர் ஜான் கிளாடி குற்றச்சாட்டாக பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்