- Advertisement -
Homeபொழுதுபோக்குஒடுக்கப்பட்டவர்களின் கஷ்டங்களை வைத்து வியாபாரம் செய்யும் இயக்குனர்கள்-  வெளுத்து வாங்கிய மூத்த நடிகர்

ஒடுக்கப்பட்டவர்களின் கஷ்டங்களை வைத்து வியாபாரம் செய்யும் இயக்குனர்கள்-  வெளுத்து வாங்கிய மூத்த நடிகர்

- Advertisement -

பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றி மாறன் ஆகியோர் இந்தியாவே திரும்பி பார்க்க வைக்கும் இயக்குனர்களாக திகழ்ந்து வருகிறார்கள். அவர்கள் இயக்கும் திரைப்படங்கள் சமூக ஏற்றத்தாழ்வுகளையும் சாதிய அதிகாரத்தையும் தோலுரித்து காட்டுவது போல் அமைவது வழக்கம். ஆதலால் இவர்களின் திரைப்படங்களுக்கு ஒரு பக்கம் நல்ல வரவேற்பு இருந்தாலும் மறு பக்கம் எதிர்ப்புகளும் கிளம்புவது உண்டு.

சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த “மாமன்னன்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், மாரி செல்வராஜ் தேவர் மகன் குறித்து வெளிப்படுத்திய கருத்து பல விவாதங்களை எழுப்பியது. மாரி செல்வராஜின் பேச்சுக்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அதே போல் “மாமன்னன்” திரைப்படமும் சாதி குறித்த பல விவாதங்களை எழுப்பியுள்ளது. அத்திரைப்படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் ஒரு பட்டியல் வகுப்பை சேர்ந்த கதாபாத்திரம் எனவும், அதிமுகவின் தனபால் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கிய கதாபாத்திரம் எனவும் கூறப்பட்டு வருகிறது.

அதே போல் சேலம் பகுதியில் மாமன்னன் படத்தின் கதை நிகழ்வதால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயரும் அடிபடுகின்றன. இவ்வாறு மாமன்னன் குறித்த விவாதங்கள் பலவும் பரபரப்பாகவே வலம் வந்துகொண்டிருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த நடிகர் எஸ்.வி.சேகர், “ஜாதிகளை உயர்த்தி பிடிக்கிற இயக்குனர்களுக்கு ஒரே ஒரு விஷயத்தை கூறிக்கொள்கிறேன்.

இது போன்ற படங்களை எடுக்க பல கோடி ரூபாய்கள் செலவழிக்கப்படுகிறது. எந்த ஜாதியை உயர்த்தி அவர்களை மேலே கொண்டு வர வேண்டும் என நினைக்கிறீர்களோ யாரை நசுக்கப்பட்டார்கள், அமுக்கப்பட்டார்கள், ஒடுக்கப்பட்டார்கள் எனவும் கூறுகிறார்களோ, அந்த சமூக மக்களை அழைத்து அவர்களை படிக்க வையுங்கள், வீடு கட்டி கொடுங்கள். இது போல் செய்துவிட்டு போங்களேன். இது மட்டும் செய்ய மாட்டிக்கிறீர்கள், ஆனால் அவர்களின் வலியையும் கஷ்டத்தையும் வைத்து வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்கிறீர்கள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்