- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னால் மறக்க முடியாத ஹீரோயின் என்றால் அது அவர்தான், இயக்குனர் சுந்தர் சி சொன்னதைக் கேட்டு...

என்னால் மறக்க முடியாத ஹீரோயின் என்றால் அது அவர்தான், இயக்குனர் சுந்தர் சி சொன்னதைக் கேட்டு ஆடிப்போன ரசிகர்கள் – ரொம்பவும் கஷ்டம்டா சாமி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. நடிகராகவும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர். கடந்தாண்டில் அவர் இயக்கிய நடித்த அரண்மனை 4 படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரூ. 100 கோடி வசூல் பாக்ஸ் ஆபிஸிலும் இணைந்தது. தொடர்ந்து இப்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர் சி இயக்கி வருகிறார். இதில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.

இயக்குனர் சுந்தர் சி முரட்டுக்காளை சண்ட தலைநகரம் வீராப்பு தீ நகரம் மறுபக்கம் இருட்டு குரு சிஷ்யன் பெருமாள் முத்தின கத்திரிக்கா ஐந்தாம் படை ஆயுதம் செய்வோம் உள்ளிட்ட படங்களில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். இதில் தீ பெருமாள் சண்ட போன்ற படங்களில் நடிகை நமீதா, சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சுந்தர் சி நடித்த படங்களில் தலைநகரம் முரட்டுக்காளை வீராப்பு தீ முத்தின கத்திரி்க்கா உள்ளிட்ட சில படங்கள் பெரிய வரவேற்பை வெற்றியை பெற்ற நிலையில், அடுத்தடுத்த அவரது படங்கள் பலத்த தோல்வியை சந்தித்தன. அதே நேரத்தில் அவர் இயக்கிய அரண்மனை 1 மற்றும் அரண்மனை 4 படங்களில் சுந்தர் சி நாயகனாக நடித்திருந்தார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் சுந்தர் சி கூறியதாவது, என்னுடன் நடித்த நடிகைகளில் எனக்கு பிடித்தவர் என்றால் நடிகை சினேகாவை ரொம்ப பிடிக்கும். அழகான ஒரு கதாநாயகி. ரொம்பவும் புரபஷனல். அதனால் நடிகை சினேகா எனக்கு எப்பவுமே பேவரைட் என்று சொல்லலாம்.

என்னால் மறக்க முடியாத நடிகை என்றால் அது நமீதா. ஏன் அவர் மறக்க முடியாதவர் என்றால் எனக்கு டான்ஸ் வராது, ஒண்ணும் வராது. ஆனால் என்னை டான்ஸ் ஆட வைப்பார்கள். அப்படி பாடல் காட்சி என்றாலே எல்லா டான்ஸ் மாஸ்டரும் மிஸ் பண்ணாம கொடுக்கற ஒரு முக்கியமான மூவ்மென்ட் ஹீரோயினை தோளில் தூக்கி வைத்து ஹீரோ ஆடணும்.

அது மத்த ஹீரோயின் என்றால் பரவாயில்லே. ஆனா நமீதாவை தோளில் தூக்கி வெச்சு ஆடணும். அதனால் நமீதா எனக்கு ஜோடி என்றாலே ஒவ்வொரு படத்திலும் அவரை தோளில் தூக்கி வெச்சு ஆட நான் பிராக்டீஸ் பண்ணீட்டு போகணும். அந்த வகையில் என்னால் மறக்க முடியாத நடிகை நமீதா என்று அந்த நேர்காணலில் இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தர் சி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்