- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்தில் கவுண்டமணியை ஏமாற்றிதான் நான் படம் எடுத்தேன் - பல ஆண்டுகளுக்கு பின் மேடையில்...

அந்த விஷயத்தில் கவுண்டமணியை ஏமாற்றிதான் நான் படம் எடுத்தேன் – பல ஆண்டுகளுக்கு பின் மேடையில் உண்மையை சொன்ன பிரபல இயக்குனர்

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் கவுண்டமணிக்கு என எப்போதுமே தனி மாஸ் இருக்கிறது. ஹீரோக்களை போலவே, கவுண்டமணி மீதும் இயக்குனர்களுக்கு அதிக மரியாதை, பயம் உண்டு. காரணம் தமிழ் சினிமாவில் அவரும் ஒரு சீனியர். தன் காமெடியால் பல படங்களை வெற்றி பெறச் செய்தவர். ஹீரோக்களுக்கு இணையான சம்பளம் வாங்குபவர். குறிப்பாக கவுண்டமணிக்கு ரசிகர்கள் மிக மிக அதிகமாக உள்ளனர்.

இயக்குனர் வி சேகர், டைரக்டர் கே பாக்யராஜிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து பிறகு, இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அவரது முதல் படமாக வெளியான படம் நீங்களும் ஹீரோதான். இந்த படத்தில் சினிமா ஹீரோக்களின் உண்மை முகம் வேறு என காட்டியிருந்தார். பலரும் பாராட்டிய இந்த படம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

- Advertisement -

அதன்பிறகு குடும்பக் கதைகளுக்கு மாறிய வி சேகர், நடுத்தர குடும்பம் சார்ந்த பிரச்னைகளை மையப்படுத்தி நிறைய படங்களை இயக்கி, அதில் மிகப்பெரிய வெற்றி இயக்குனராக மாறினார். குறிப்பாக பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், ஒண்ணா இருக்க கத்துக்கணும், நான் புடிச்ச மாப்பிள்ளை, நான் பெத்த மகனே, காலம் மாறிப்போச்சு, விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டணா செலவு பத்தணா, பொங்கலோ பொங்கல், புகுந்த வீடா பொறந்த வீட என பல ஹிட் படங்களை கொடுத்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் வி சேகர் பேசியதாவது, நான் இயக்கிய முதல் படம் நீங்களும் ஹீரோதான் படம் தோல்வி அடைந்ததால், 2வது படம் நான் புடிச்ச மாப்பிள்ளை படத்தை 10 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் எடுத்தேன். இந்த படத்தில் நடிக்க நிழல்கள் ரவியும், ஜனகராஜூம் நான் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டனர். இந்த படத்தில் கவுண்டமணி, செந்தில் இருந்தால் வியாபாரத்துக்கு நன்றாக இருக்கும் என நினைத்தேன். அவரிடம் 5 நாள் கால்ஷீட் மட்டும் வாங்கியிருந்தேன்.

- Advertisement -

ஆனால் அப்போது கவுண்டமணி, ஒரு படத்தில் நடிக்க ஒரு நாள் சம்பளமாக ஒரு லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு இருந்தார். அப்போது கவுண்டமணியிடம் படப்பிடிப்பில் இருந்த ஒருவர், இந்த இயக்குனர் இன்னொரு பாக்யராஜாக வருவார். இன்னும் ஒரு 10 நாட்கள் கால்ஷீட் சேர்த்துக் கொடுங்கள். இந்த படம் 100 நாட்கள் கண்டிப்பாக ஓடும். இந்த பட வெற்றியை வைத்து, அடுத்த படத்தில் சம்பளத்தில் உயர்த்தி விடலாம், என்று கூறியிருக்கிறார்.

அதை நம்பிய கவுண்டமணி, இந்த படத்தில் நடிக்க 20 நாட்கள் கால்ஷீட் தந்து நடித்துக்கொடுத்தார். இப்படி அவரை ஏமாற்றி பொய் சொல்லி தான் அந்த படத்தை எடுத்தேன் என, வி சேகர் அந்த விழாவில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இந்த படம் ஹிட் ஆன நிலையில், வி சேகரின் பல படங்களில் கவுண்டமணி நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக ஒண்ணா இருக்க கத்துக்கணும் படத்தில் நடித்த அந்த வெட்டியான் கேரக்டர்தான் தனக்கு மிக பிடித்தமான கேரக்டர் எனவும் கவுண்டமணியே கூறி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்