- Advertisement -
Homeபொழுதுபோக்குதேவையில்லாம கொம்பு சீவிவிடாதீங்க, விஜய் சூப்பர் ஸ்டார்ன்னு யார் சொன்னா?- பத்திரிக்கையாளர்களிடம் கடுப்பான பிரபல இயக்குனர்

தேவையில்லாம கொம்பு சீவிவிடாதீங்க, விஜய் சூப்பர் ஸ்டார்ன்னு யார் சொன்னா?- பத்திரிக்கையாளர்களிடம் கடுப்பான பிரபல இயக்குனர்

- Advertisement -

“வாரிசு” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டின் போது சரத்குமார் போகிற போக்கில் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று கூறிவிட, விஜய் ரசிகர்களும் அதனை அப்படியே பிடித்துக்கொண்டனர். சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் பலரும் விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்று கருத்து தெரிவிக்க, ரஜினி ரசிகர்கள் கொந்தளித்தனர். அதனை தொடர்ந்து ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து சமீபத்தில் “ஜெயிலர்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கூறிய காகா, கழுகு கதை விஜய் ரசிகர்களை உசுப்பேத்துவிட்டது. அது மட்டுமல்லாது தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பேசியபோது, “ரஜினிகாந்திற்கு 72 வயதாகிறது. ஆனாலும் தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கிறார்கள். அதே போல் உங்களுக்கு 72 வயது ஆகும்போது தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்றால் நீங்கள் உங்களை சூப்பர் ஸ்டார் என்று கூறிக்கொள்ளுங்கள்” என கூறியது விஜய் ரசிகர்களின் மனதில் எரிமலையை பற்றவைத்தது போல் ஆனது.

- Advertisement -

இவ்வாறு விவகாரம் போய்க்கொண்டிருக்க சமீபத்தில் ஒரு பட விழாவில் பேசிய இயக்குனர் பேரரசு, “இப்போதெல்லாம் சினிமாவில் பட்டம் யாருக்கு என்ற பிரச்சனை நடக்கிறது. சம்பந்தப்பட்டவர்களே சும்மா இருக்கிறார்கள். ஆனால் நம் ஆட்கள் கொம்பு சீவிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், “விஜய் ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு போட்டி நடந்துகொண்டிருக்கிறது. விஜய் சார் என்றைக்காவது நான்தான் சூப்பர் ஸ்டார் என்று கூறியிருக்கிறாரா? யாரோ ஒருத்தர் சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார்கள். இதை எல்லாம் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்கிறார்கள்.

- Advertisement -

தளபதி என்றால் விஜய், சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த். இதுதான் எப்போதும். இவ்வாறு சண்டை போடுவது விஜய் சார்க்கே மன உலைச்சலாக இருக்கும். ரஜினி சார்க்கும் மன உலைச்சலாக இருக்கும். சில விஷயங்களை நாம் கடந்து போய்விட வேண்டும். ரொம்ப விவாதம் செய்யக்கூடாது” என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்