- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் படத்தை இயக்கியதால் ஒதுக்கப்பட்ட டைரக்டர், வாய்ப்பே இல்லாமல் முடங்கிய அவலம் - ஆனா ...

விஜய் படத்தை இயக்கியதால் ஒதுக்கப்பட்ட டைரக்டர், வாய்ப்பே இல்லாமல் முடங்கிய அவலம் – ஆனா டிவி சீரியலை சினிமாவா காட்டுனா எப்படி பாஸ்?

- Advertisement -

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் பொசிஷனில் இருப்பவர். அவரது படங்கள் என்றாலே எப்போதும் தனி மாஸ்தான். குறிப்பாக விஜய் திரைப்பட பயத்தில் கில்லி, போக்கிரி படங்களுக்கு பிறகு அவரது லெவலே வேற மாதிரி ஆகி விட்டது. விஜய் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்களும், விஜய் படத்தை இயக்க இயக்குனர்கள், அவரது கண் அசைவுக்காக காத்திருக்கின்றனர்.

ஒரு படத்தில் நடிக்க 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் விஜய், அடுத்து 250 கோடி ரூபாய் கேட்டாலும், தயாரிப்பாளர்கள் தாராளமாக தர முன்வருவார்கள் என்பதுதான் உண்மை. ஆனால் அந்த ஒரு சூழ்நிலையில், இனி சினிமா வேண்டாம். அரசியலில் இறங்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு என்னால் இயன்ற நன்மைகளை செய்கிறேன் என்று முடிவெடுத்துள்ள விஜயை, பலரும் பாராட்டிக்கொண்டு இருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில், நடிகர் விஜய் இப்போது நடித்துவரும் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம், அதைத்தொடர்ந்து அவரது 69வது படம் என 2 படங்கள் மட்டுமே அவரது லிஸ்ட்டில் உள்ளது. அதன்பிறகு அரசியல் களத்தில் மட்டுமே விஜயை காண முடியும். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக, ஒருவேளை மக்கள் ஆதரவளித்தால், பிரபஞ்சம் அதற்கு சம்மதித்தால் அவரது கனவு நனவானால் தமிழ்நாட்டின் தலைவனாகவும் பார்க்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால் இப்படி பெருமை வாய்ந்த விஜயின் படத்தை இயக்கிய தெலுங்கு பட இயக்குனர் ஒருவர், விஜய் நடித்த படத்தை எடுத்தபிறகு, சினிமாவை விட்டே ஒதுக்கப்பட்ட ஒரு சம்பவமும் நடந்திருக்கிறது. அவர் தெலுங்கு பட இயக்குனர் வம்சிதான். வாரிசு என்ற விஜய் படத்தை இயக்கியவர். இந்த படத்தை தெலுங்கு பட தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரித்தார்.

- Advertisement -

இந்த படத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஷாம், சங்கீதா, யோகிபாபு என பெரிய நட்சத்திரக் கூட்டமே நடித்திருந்தது. குடும்ப கதையை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தில் சரத்குமார் மகனாக விஜய் நடித்திருந்தார். பெரிய அளவில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் பெரிய ஏமாற்றத்தையே தந்தது.

மாஸ் ஹீரோ விஜயை வைத்து, இப்படி டிவி சீரியல் போன்ற ஒரு படத்தை இயக்கிய தெலுங்கு பட இயக்குனர் வம்சிக்கு, வாரிசு படத்துக்கு பிறகு இதுவரை ஒரு படத்தை கூட இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பட வாய்ப்புகளே இல்லாமல் திரையுலகை விட்டு ஒதுங்கியுள்ளார். வாரிசு படத்தின் மிக மோசமான தோல்விதான், இயக்குனர் வம்சியின் இந்த அவல நிலைக்கு காரணம் என்று, பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்