- Advertisement -
Homeபொழுதுபோக்குகாதல் படங்களை இயக்க என்னை அவர்கள் விடுவது இல்லை, காதல் படங்களே எனக்கு பிடிக்கும் -...

காதல் படங்களை இயக்க என்னை அவர்கள் விடுவது இல்லை, காதல் படங்களே எனக்கு பிடிக்கும் – இப்படிச் சொன்னது இயக்குனர் வெற்றிமாறனா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர் வெற்றிமாறன் மிகவும் கவனம் பெற்ற ஒரு படைப்பாளியாக இருந்து வருகிறார். நடிகர் தனுஷ் நடித்த பொல்லாதவன் படம் மூலம் இயக்குனராக வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் பைக்கை மையப்படுத்திய கதைக்களத்தில் ஒரு அதிரடி ஆக்சன் காதல் கதையை வெற்றிமாறன் சொல்லி இருந்தார்.

அதன்பிறகு வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் விசாரணை அசுரன் வடசென்னை விடுதலை விடுதலை 2 படங்களை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தை டைரக்ட் செய்ய இருக்கிறார். இந்த படம் 3 ஆண்டுகளில் உருவாகும் என்று சொல்லப்படுகிறது. இயக்குனர் அமீர் இதில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் தனுஷ், குத்து ரம்யாவை காதலிப்பார். ஆடுகளம் படத்திலும் தனுஷ், மஞ்சுவாரியார் இடையே மெல்லிய காதல் ஓட்டம் இருக்கும். விசாரணை படம் முழுக்க முழுக்க ஆக்சன் திரில்லர் படம்தான். ஆடுகளம் படத்திலும் தனுஷ், டாப்ஸி காதல் காட்சிகள் காணப்படும். விடுதலை படத்திலும் சூரி பாவனிஸ்ரீக்கு இடையே காதல் காட்சிகள் இருக்கும். ஆனாலும் ஆக்சன் திரில்லர் காட்சிகளே படத்தில் அதிகமாக வரும்.

வெற்றிமாறன் இயக்கிய படங்களில் காதல் காட்சிகள் 10 சதவீதம் மட்டுமே இருந்தால் 90 சதவீதம் படத்தில் அதிரடி சண்டை வன்முறை காட்சிகளே அதிகமாக வரும். புரட்சி கருத்துகளை சொல்லும் கதைக்களமாக அந்த படம் இருக்கும். இது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதுகுறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் வெற்றிமாறன் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து வெற்றிமாறன் கூறியதாவது, ஒரு படத்தை எடுத்து முடிக்க எவ்வளவு காலமாகும் என்பதை இயக்குனரை தவிர வேறு யாரும் தீர்மானிக்க முடியாது, தீர்மானிக்கவும் கூடாது. சமீபத்தில் ஒரு பெண் உதவி இயக்குனராக சேர என்னிடம் வந்தார். அவரைப் பார்க்கும்போது 20 ஆண்டுகளுக்கு முன்பு என்னை பார்த்தது போலவே இருந்தது.

சினிமாவில் பெண் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் அதிக வாய்ப்புகள் தரப்பட வேண்டும். தற்போது சினிமாவில் பெண்கள் சாதித்து வருவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. நான் வன்முறை படங்களை காட்டிலும் காதல் படங்களை தான் அதிகம் தேர்வு செய்வேன். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு வேறு மாதிரியாக இருக்கிறது. அதனால்தான் என்னவோ காதல் படங்களை நான் இயக்குவது கைகூடாமலேயே போய் வருகிறது என்று வெற்றிமாறன் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்