- Advertisement -
Homeபொழுதுபோக்கு26 ஆண்டுகளுக்கு முன்பு… 1999ம் ஆண்டுகளில் தமிழ் ஹீரோக்கள் வாங்கிய சம்பளம் பற்றி தெரியுமா? அட...

26 ஆண்டுகளுக்கு முன்பு… 1999ம் ஆண்டுகளில் தமிழ் ஹீரோக்கள் வாங்கிய சம்பளம் பற்றி தெரியுமா? அட தளபதி விஜய் சம்பளம் இவ்வளவுதானா?

- Advertisement -

ஒரு சாதாரண மனிதன் அல்லது நடுத்தர குடும்பத்தில் வாழும் ஒரு தனிநபர் தனது ஆயுள்காலம் முழுவதும் இரவு பகல் பாராமல் உழைத்தாலும் கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடியாது. அதிலும் இன்றைய நட்சத்திர ஹீரோக்களின் ஒரு படத்தின் சம்பளத்தில் 10 சதவீதம் பணத்தை ஒட்டுமொத்தமாக வாழ்நாளில் சம்பாதிக்க முடியுமா? என்கிற அளவில்தான் இருந்து வருகிறது.

உதாரணமாக இன்று பல நட்சத்திர நடிகர்களின் சம்பளம் ரூ. 100 கோடியை கடந்து விட்டது. தமிழில் விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் படத்தில் நடிக்க ரூ. 250 கோடி வாங்கியதாக சொல்லப்பட்டது. ரஜினி கமல் ஒரு படத்தில் நடிக்க ரூ. 150 கோடி வரை வாங்குகின்றனர். அஜீத்குமார் சம்பளமும் ரூ. 100 கோடியை எப்போதோ கடந்து விட்டது.

மேலும் தமிழ் சினிமாவில் இன்றைய முன்னணி நட்சத்திர நடிகர்களான சூர்யா சியான் விக்ரம் தனுஷ் சிம்பு விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன் ரவிமோகன் உள்ளிட்டோரின் சம்பளம் ரூ. 50 கோடியை கடந்து விட்டதாக சொல்லப்படுகிறது. நடிகர் சூரி 4 படங்களில் மட்டுமே ஹீரோவாக நடித்த நிலையில் மண்டாடி படம் ஹிட் ஆனால் அவரது சம்பளம் ரூ. 30 கோடிக்கு வந்து விடும் என்கின்றனர்.

ஒரு படத்தின் தயாரிப்பு பட்ஜெட்டில் 50 சதவீதத்துக்கு மேல் ஹீரோக்களே சம்பளமாக வாங்கி விடும் ஒரு மோசமான சூழல்தான் இப்போது நிலவுகிறது. அதனால்தான் தயாரிப்பாளர்கள் குறைந்தபட்ச முன்தொகை பிறகு லாபத்தில் பங்கு என்ற முறைக்கு மாறிவிடுமாறு சம்பளம் கேட்கும் ஹீரோக்களுக்கு கூறி வருகின்றனர். இது மட்டுமே திரைப்படத் துறையை தொடர்ந்து வாழ வைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் 26 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1999ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களாக வலம் வந்த சில நடிகர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சம்பளம் ரூ. 3.75 கோடி நடிகர் கமல்ஹாசன் சம்பளம் ரூ. 2.75 கோடி. கேப்டன் விஜயகாந்த் சம்பளம் ரூ.1.25 கோடி. இவர்கள் 3 பேர் மட்டுமே அப்போது கோடிகளில் சம்பளம் வாங்கிய உச்ச நடிகர்களாக உள்ளனர்.

அடுத்து நடிகர் சரத்குமார் சம்பளம் ரூ. 65 லட்சம் நவரச நாயகன் கார்த்திக் சம்பளம் ரூ. 60 லட்சம் ஆக்சன் கிங் அர்ஜூன் சம்பளம் ரூ. 50 லட்சம் நடிகர் சத்யராஜ் சம்பளம் ரூ. 50 லட்சம் நடிகர் விஜய் சம்பளம் ரூ. 45 லட்சம் நடிகர் அஜீத்குமார் சம்பளம் ரூ. 45 லட்சம் நடிகர் பிரசாந்த் சம்பளம் ரூ. 35 லட்சம் என்று தெரிய வந்துள்ளது. ஜனநாயகன் படத்துக்கு ரூ. 250 கோடி சம்பளம் வாங்கிய விஜய் சம்பளம் 26 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 45 லட்சம் என்பது கவனிக்கத்தக்கது.

சற்று முன்