- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் அஜீத்குமாருடன் அந்த நடிகரை ஒப்பிடலாமா? - சர்ச்சையில் சிக்கிய இயக்குனர் விக்ரமன்!

விஜய் அஜீத்குமாருடன் அந்த நடிகரை ஒப்பிடலாமா? – சர்ச்சையில் சிக்கிய இயக்குனர் விக்ரமன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் விஜய் அஜீத்குமார் மற்றும் நடிகர் விஷால். இவர்கள் நடித்த பெரும்பாலான படங்கள் ஆக்சன் அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த படங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சில காட்சிகளில் டூப் போடாமல் ரிஸ்க் எடுத்தும் அவர்கள் நடித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி, ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் பீனிக்ஸ் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகியிருக்கிறார். இந்த படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார். தேவர்தர்ஷினி ஆடுகளம் நரேன் சம்பத்ராஜ் போன்றவர்களும் படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்து இருக்கின்றனர்.

- Advertisement -

இந்த படத்துக்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ஆளுங்கட்சி எம்எல்ஏவை 17 வயது சிறுவன் வெட்டிக் கொலை செய்கிறான். அவனை கைது செய்து சிறார் சீர்திருத்த சிறையில் போலீசார் சிறை வைக்கின்றனர். அங்கு அவன் பல பிரச்னைகளை சந்திக்கிறான். இதற்கிடையே கொல்லப்பட்ட எம்எல்ஏ குடும்பமும், அந்த எம்எல்ஏ சார்ந்த கட்சியும் சிறுவனை பழிவாங்க துடிக்கிறது.

அதில் இருந்த சிறுவன் மீண்டாரா இல்லையா என்பதுதான் பீனிக்ஸ் படத்தில் கதைக்களமாக உள்ளது. பீனிக்ஸ் படத்தை பொருத்த வரை முழுக்க முழுக்க ஆக்சன்தான். ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கம் என்பதால் சண்டை காட்சிகளில் ரசிகர்களை பெரிதாக அதகளம் செய்திருக்கிறார். அதுதான் படத்தின் பிளஸ் பாயிண்ட் ஆக உள்ளது. இதற்கிடையே படத்தின் ஹீரோ, விஜய் சேதுபதி மகன் சூர்யா குறித்து பல ஹிட் படங்களை தந்த இயக்குனர் விக்ரமன் கூறியுள்ள கருத்து இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

பீனிக்ஸ் படம் குறித்து பேசிய இயக்குனர் விக்ரமன் கூறியிருப்பதாவது, நடிகர் விஜய் சினிமாவை விட்டு செல்கிறார். நடிகர் அஜீத்குமாரும் கார் ரேஸ்களில் ஆர்வமாக இருக்கிறார். நடிகர் விஷாலும் இப்போது அதிகமாக படங்களில் நடிப்பதில்லை. அதனால் தமிழ் சினிமாவில் ஆக்சன் ஹீரோக்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அந்த பற்றாக்குறையை போக்க சூர்யா சரியான ஆளாக இருப்பார்.

அந்த வெற்றிடத்தை விஜய் சேதுபதி மகன் சூர்யா கண்டிப்பாக நிரப்புவார் என்று விக்ரமன் கூறியிருக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கிய படம் என்பதால் சண்டை காட்சிகள் விறுவிறுப்பாக உள்ளது. அதற்காக விஜய் அஜீத்குமார் விஷால் ஆகியோருக்கு இணையாக சூர்யா விஜய் சேதுபதியை வைத்து விக்ரமன் பாராட்டுவது சரியல்ல. இது எல்லாம் கொஞ்சம் ஓவர் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்