தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு கலைஞராக ஆர்ஜே பாலாஜி பல படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது சில படங்களை இயக்கவும் செய்கிறார். அந்த வகையில் எல்கேஜி, சிங்கப்பூர் சலூன் ஆகிய படங்களில் நாயகனாகவும், நானும் ரவுடிதான், தேவி போன்ற சில படங்களில் காமெடி நடிகராகவும் ஆர்ஜே பாலாஜி நடித்திருக்கிறார்.
அதே நேரத்தில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படத்தையும், சத்யராஜ், ஊர்வசி முக்கிய கேரக்டர்களில் நடித்த வீட்ல விசேஷம் ஆகிய படங்களை இயக்கி நாயகனாக நடித்தவர் ஆர்ஜே பாலாஜி. அத்துடன் விரைவில் ஆர்ஜே பாலாஜி நடித்த சொர்க்கவாசல் என்ற திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குவா படம் எதிர்மறையான விமர்சனங்களுடன் திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. கங்குவா படத்தை அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 என்ற படத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். மாறுபட்ட காதல் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார்.
சூர்யா 44 படத்தை அடுத்து நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கும் தனது 45வது படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். இதற்கிடையே ஆர்ஜே பாலாஜி வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் கூறியிருப்பதாவது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள இரும்புக்கை மாயாவி படம் குறித்த ஒரு முக்கியமான தகவலை ஆர் ஜே பாலாஜி இதில் கூறியிருக்கிறார்.
அதுகுறித்து ஆர்ஜே பாலாஜி கூறுகையில், மாநகரம் படத்திற்கு முன்பே சூர்யாவை வைத்து இரும்புக்கை மாயாவி என்ற படத்தை இயக்க எனது நண்பரான லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டார். அந்த படத்தில் நானும் ஒரு முக்கிய கேரக்டரில் இருந்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக இரும்புக்கை மாயாவி படம் தொடங்கப்படவில்லை.
ஆனால் நின்று போன அந்த படத்தை சூர்யாவை வைத்து லோகேஷ் கனகராஜ் கண்டிப்பாக மீண்டும் இயக்குவார். அப்போது அதில் சூர்யாவுடன் இணைந்து ஏற்கனவே நடிக்க இருந்த அதே கேரக்டரில் நானும் கண்டிப்பாக நடிப்பேன் என்று ஆர்ஜே பாலாஜி அதில் கூறியிருக்கிறார். இதன்மூலம் இரும்புக்கை மாயாவி படத்தில் ஆர்ஜே பாலாஜி முக்கிய கேரக்டரில் நடிப்பதை உறுதி செய்திருக்கிறார்.





