- Advertisement -
Homeபொழுதுபோக்குஏஆர் ரகுமான் அவ்வளவு தூரம் எடுத்துச் சொல்லியும் நான் கேட்கலே, தப்பு செஞ்சுட்டேன் - வெளிப்படையாக...

ஏஆர் ரகுமான் அவ்வளவு தூரம் எடுத்துச் சொல்லியும் நான் கேட்கலே, தப்பு செஞ்சுட்டேன் – வெளிப்படையாக பேசிய பிரபல இயக்குனர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குனர் விக்ரமன். புது வசந்தம் படம் மூலம் தமிழ் சினிமா இயக்குனராக விக்ரமன் அறிமுகமானார். இசையில் பெரிய திறமை இருந்தும் சாதிக்க முடியாத 4 நண்பர்களுக்கு மத்தியில் ஒரு தோழியாக வரும் கதாநாயகியை மையப்படுத்தி உருவான புது வசந்தம் படம் பெரிய அளவில் வரவேற்பை விக்ரமனுக்கு பெற்றுத் தந்தது.

புது வசந்தம் படத்தின் அபார வெற்றியைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை ரசிகர்களுக்கு விக்ரமன் கொடுத்தார். குறிப்பாக வானத்தை போல உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் சூரிய வம்சம் பூவே உனக்காக பிரியமான தோழி உன்னை நினைத்து கோகுலம் நான் பேச நினைப்பதெல்லாம் என பல படங்களை சொல்லாம்.

ஆனால் விக்ரமன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்த புதிய மன்னர்கள் படம் மட்டும் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் பெற முடியாமல் தோல்வியடைந்தது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். 1990களில் வெளியான இந்த படத்தில் இடம்பெற்ற நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கி போனேன்டி பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் விக்ரமன் புதிய மன்னர்கள் படம் குறித்து கூறியதாவது, இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். ஆனால் அவர் ரொம்பவும் பிஸியாக இருந்தார். புதிய மன்னர்கள் படத்துக்கு 60 சதவீதம் மட்டுமே ரீ ரிக்கார்டிங் செய்திருந்தார்.

இந்த படத்தை அவசரமாக வெளியிட வேண்டும் என்ற நிலையில் நான் இருந்ததால், மீதி 40 சதவீதம் படத்தில் புதிய வசந்தம் படத்தின் பிஜிஎம் இசையை எடுத்துப் போட்டு ரீ ரிக்கார்டிங் பணிகளையும் செய்து நானே இந்த படத்தை முடித்து வெளியிட்டு விட்டேன். ஆனால் படம் பெரிய தோல்வியை சந்தித்தது.

ஒரு தென்றல் புயலாகி வருகிறதே என மற்ற படங்களில் இருந்த சில பாடல்களை எல்லாம் புதிய மன்னர்கள் படத்தில் தேவையின்றி இடைச்செருகலாக சேர்த்து இருந்தேன். இதையறிந்த ஏஆர் ரகுமான், இது ஒரு சீரியஸ் சப்ஜெக்ட் படம். அதில் இது மாதிரியான விஷயங்களை சேர்த்தால் படத்தின் தாக்கம் குறைந்து விடும். எதிர்பார்க்கும் அளவுக்கு ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் என்னிடம் எடுத்துக் கூறினார். ஆனால் அவர் சொன்னதை கேட்காமல் நான் செய்த அந்த தவறுகளே படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாகி விட்டது, என்று இயக்குனர் விக்ரமன் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்