- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட இதை கூட சரியாக செய்ய மாட்டாங்களா? பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலி, நடிகை சமந்தா...

அட இதை கூட சரியாக செய்ய மாட்டாங்களா? பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலி, நடிகை சமந்தா உள்ளிட்ட திரை பிரபலங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

- Advertisement -

தெலுங்கானா மாநிலத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியான எஸ் ஐ ஆரின் ஒரு பகுதியாக சினிமாத்துறையை சேர்ந்த பல முக்கிய பிரபலங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது சினிமா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

பாகுபலி ஆர்ஆர்ஆர் போன்ற பிளாக்பஸ்டர் படங்களை தந்த ஐதராபாத் சேர்ந்த இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி மற்றும் தெலுங்கில் நட்சத்திர நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மகேஷ் பாபு வெங்கடேஷ் மற்றும் நடிகை சமந்தா ரூத்பிரபு உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

- Advertisement -

அத்துடன் பிரபல கிரிக்கெட் வீரர் வி வி எஸ் லட்சுமணனுக்கும் தேர்தல் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள சில விவரங்களில் எழுத்துப் பிழைகள் இருப்பது பெற்றோர் பெயர்கள் முரண்பாடுகள் காணப்படுவது உள்ளிட்ட காரணங்களால் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் முந்தைய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரங்களுடன் தற்போதைய வாக்காளர் பட்டியல் தகவல்களை இணைப்பதில் ஏற்பட்ட சிக்கல்களும் நோட்டீஸ் வழங்கப்பட்டதற்கான காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. இப்படி முரண்பாடுகளும் குழப்பங்களும் இருக்கும் பட்சத்தில் நோட்டீஸ் அனுப்பி சரியான விவரங்களை தேர்தல் துறை அதிகாரிகள் கேட்டு பெற்று வருகின்றனர்.

- Advertisement -

தெலுங்கானாவில் வாக்காளர் பட்டியலை சரி பார்த்து அதில் உள்ள தவறுகளை திருத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வாக்காளர் விவரங்களில் சந்தேகம் அல்லது முரண்பாடு காணப்படும் நபர்களிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி வருகிறது.

இந்த நடவடிக்கையின் மூலம் வாக்காளர் பட்டியில் உள்ள தகவல்கள் சரிபார்க்கப்பட்டு தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த அடிப்படையில் சரியான விவரங்களை தராமல் குழப்பம் தந்ததால் இயக்குனர் ராஜமௌலி நடிகர்கள் வெங்கடேஷ் விஜய் தேவரகொண்டா மகேஷ்பாபு மற்றும் நடிகை சமந்தா உள்ளிட்டோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

- Advertisement -

சற்று முன்