- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்தில் பகத் பாசில் கதாபாத்திரம் இதுதான்... அட செம ரோலா இருக்கேப்பா...

ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்தில் பகத் பாசில் கதாபாத்திரம் இதுதான்… அட செம ரோலா இருக்கேப்பா…

- Advertisement -

ஜெயிலர், லால் சலாம் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். ஜெய் பீம் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்த ஞானவேல் தான் இந்த திரைப்படத்தின் இயக்குனர்.

ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார் மோகன்லால் என வெளி மாநிலத்திலிருந்து முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். தற்போது இதே பார்முலாவையும் தான் வேட்டையன் படத்திற்காக கையில் எடுத்திருக்கிறார் ஞானவேல். இதில் பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா, துஷாரா விஜயன், ரித்திகா சிங் என ஏராளமானோர் நடித்துள்ளனர்.

- Advertisement -

ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இதன் சூட்டிங் திருவனந்தபுரத்தில் ஆரம்பித்து திருநெல்வேலி, சென்னை, புதுச்சேரி உள்பட பல்வேறு இடங்களில் நடைபெற்றது. தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு அனிருத் இசை அமைக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் வெளியான வேட்டையன் திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ பலரையும் கவர்ந்தது. அதில் குறி வச்சா இரை விழனும் என்னும் பஞ்ச் டயலாக்கை ரஜினிகாந்த் பேசியிருந்தார். அதுமட்டுமல்ல டீசர் முழுவதும் அவர் கருப்பு கண்ணாடியை அணிந்து வந்திருந்தார்.

- Advertisement -

ஏற்கனவே இந்த திரைப்படம் முழுக்க முழுக்க போலீஸ் கதை என்று கூறப்படுகிறது. என்கவுண்டரை மையப்படுத்தி இதனை ஞானவேல் எடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படியான சூழலில் ரஜினிகாந்த் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக படத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுபோக மற்ற முக்கிய நடிகர் நடிகர்களுக்கு என்ன கதாபாத்திரம் என்று ரசிகர்கள் இப்போதே எதிர்பார்த்து இருக்கின்றனர். அதற்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பகத் பாசிலுக்கு இந்த திரைப்படத்தில் நகைச்சுவை கலந்த கதாபாத்திரமாம். படம் முழுக்க அவர் காமெடி செய்வார் என்று கூறப்படுகிறது. வில்லன் கதாநாயகன் என பல்வேறு கதாபாத்திரங்களில் மிரட்டி இருக்கும் பகத் பாசிலை, காமெடியான பாக்க ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்