- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை நயன்தாரா கேரக்டரில் நடிக்க மறுத்த பிரபல நடிகை, நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டாரே? -...

நடிகை நயன்தாரா கேரக்டரில் நடிக்க மறுத்த பிரபல நடிகை, நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டாரே? – டாக்சிக் படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

- Advertisement -

கன்னட சினிமாவில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்த படம் நடிகர் யாஷ் நடித்த கேஜிஎஃப். அதன்பிறகு கேஜிஎஃப் சாப்டர் 2 படமும் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. அந்த படங்களைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் யாஷ் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் டாக்சிக்.

பலமுறை ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்ட இந்த அதிரடி ஆக்சன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 26ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. மலையாள சினிமாவின் முன்னணி பெண் இயக்குனர் கீது மோகன்தாஸ் இந்த படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். இந்திய மொழிகளில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் உலகளவில் டாக்சிக் படம் வெளியாக இருக்கிறது.

- Advertisement -

இயக்குனர் பாசில் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் நடிகை சுகாசினி முதன்மை கேரக்டர்களில் நடித்த என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்தான் கீது மோகன் தாஸ். மேலும் நளதமயந்தி என்ற தமிழ் படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாகவும் கீத மோகன்தாஸ் நடித்திருக்கிறார்.

மலையாளத்தில் அர் பல படங்களில் நாயகியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. நடிகை கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள டாக்சிக் திரைப்படத்தில் கதாநாயகன் யாஷ் உடன் இணைந்து 5 முன்னணி நடிகைகள் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். அதன்படி நயன்தாரா கியாரா அத்வானி ஹூமா குரேஷி தாரா சுதாரியா மற்றும் ருக்மணி வசந்த் ஆகிய 5 நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

- Advertisement -

இவர்களில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி முதன்மை கதாநாயகியாக ஹீரோ யாஷூக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். படம் முழுக்க அதிரடி ஆக்சன் மற்றும் மாஸ் ஆன காட்சிகள் நிறைந்திருந்தாலும் கதையின் மையக்கருவாக அண்ணன் தங்கை பாசம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் நடிகர் யாஷூக்கு தங்கையாக நடிகை நயன்தாரா நடித்துள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் இந்த படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள இந்த முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு தான் வாய்ப்பு சென்றதாக தெரிகிறது. ஆனால் சில காரணங்களால் நடிகை கரீனா கபூர் இந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். அதன்பிறகு தான் அந்த கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

சற்று முன்