- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்னொரு ஜெயலலிதாவாக திரிஷா மாறுவார், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்க்கு, பிரபல பாடகி எச்சரிக்கை...

இன்னொரு ஜெயலலிதாவாக திரிஷா மாறுவார், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்க்கு, பிரபல பாடகி எச்சரிக்கை – மனைவியுடன் சேர்ந்து வாழுங்க என்றதால் வெடித்தது சர்ச்சை

- Advertisement -

நடிகர் விஜய், நடிகை திரிஷா குறித்த கிசுகிசு பல ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவில் நீடித்து வருகிறது, கில்லி படத்தில் இருவரும் இணைந்து நடித்தது முதலே அவர்களுக்குள் நட்பு இருப்பதாகவும் அடுத்தடுத்த படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்த வகையில் அவர்களது நட்பு மிகவும் இறுக்கமாகி, இதனால் விஜய் மனைவி சங்கீதா, விஜயை பிரிந்து சென்று பல மாதங்களாக லண்டனில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கில்லி படத்தை தொடர்ந்து ஆதி, குருவி, திருப்பாச்சி, லியோ ஆகிய 5 படங்களில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். இதில் லியோ படத்தில் லிப்லாக் காட்சியில் இருவரும் நடித்திருந்நது குறிப்பிடத்தக்கது. மேலும், தி கோட் படத்தில் விஜயுடன் திரிஷா முதன்முறையாக அயிட்டம் பாட்டுக்கு குத்தாட்டமும் போட்டிருக்கிறார்.

- Advertisement -

விஜய் வசிக்கும் நீலாங்கரையில் திரிஷாவுக்கும் பங்களா உள்ளது. சமீபத்தில் சென்னை ஆர்ஏ புரத்தில் உள்ள அபார்ட்மென்ட்டில் ரூ. 25 கோடி ரூபாய் விலையில், 8500 சதுர அடியில் அலுவலகம் வாங்கியுள்ளா் விஜய். அதே அபார்ட்மென்டில், ரூ. 17 கோடிக்கு வீடு வாங்கியுள்ளார் திரிஷா. அங்கு லிப்ட்டில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம்தான் சமீபத்தில் வெளியாக வைரலானது.

இந்நிலையில் பிரபல பாடகி சுசித்ரா வெளியிட்ட வீடியோ ஒன்றில் விஜய், திரிஷா குறித்து வெளிப்படையாக சில விஷயங்களை பேசியது, பெரிய அளவில் பரபரப்பாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர் சுசி லீக்ஸ் என்ற பெயரில், திரை பிரபலங்கள் குறித்த பல உண்மைகளை பேசி, தமிழ் சினிமா துறையினரையே கதிகலங்க வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பாடகி சுசித்ரா அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது, விஜய், அவரது மனைவி சங்கீதா இருவரும் மீண்டும் ஒன்றுசேர வேண்டும். ஒரு சின்ன ஈகோ சண்டையால் பிரிந்த குடும்பத்தை மீண்டும் சேர்ந்து வாழ விடாமல் தடுக்க, திரிஷா போன்ற ஒட்டுண்ணிகள் உள்ளே நுழைந்து விடுகின்றனர். லிப்ட்டில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, விஜயை சொந்தம் கொண்டாட நினைக்கின்றனர்.

இதன்மூலம் விஜயுடன் இணைய திரிஷா நினைக்கிறார். விஜய் ஆரம்பித்துள்ள கட்சிக்குள் அவர் நுழைய விரும்புகிறார். எம்ஜிஆருக்கு ஜெயலலிதா ஒரு ஒட்டுண்ணிதான். அவரிடம் அரசியல் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு அதன்பிறகு எம்ஜிஆரையே ஒதுக்கி விட்டார். ஜெயலலிதா போலதான் திரிஷாவும் இருக்க நினைக்கிறார். அதனால் விஜய் திரிஷாவை விட்டு விலகி, தனது மனைவி சங்கீதாவுடன் சேர்ந்து வாழ வேண்டும், என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்