- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதலையுடன் பிரபாஸ் படம் பார்க்க வந்த ரசிகர்கள்… உங்க அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லையா என்று...

முதலையுடன் பிரபாஸ் படம் பார்க்க வந்த ரசிகர்கள்… உங்க அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லையா என்று கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!

- Advertisement -

தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகராக இருப்பவர் பிரபாஸ். பல வெற்றிப் படங்களில் அவர் நடித்திருக்கிறார். இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவான பாகுபலி பாகுபலி 2 ஆகிய படங்களில் நடிகர் பிரபாஸின் நடிப்பு இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. அவரை பான் இந்தியா நட்சத்திர நடிகராகவும் மாற்றியது.

ஆனால் அதற்கு நடிகர் பிரபாஸ் நடித்த சாஹோ சலார் ராதே ஷியாம் ஆதிருபுருஷ் கல்கி 2898 ஏடி ஆகிய படங்களில் கல்கி படம் மட்டுமே ஓரளவுக்கு நல்ல கவனத்தை வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. இந்த கல்கி 2898ஏடி படத்தில் நடிகர் கமல்ஹாசனும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து உருவாகும் கல்கி படத்தின் 2ம் பாகத்திலும் நடிகர் கமல்ஹாசன் நடிக்க உள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் பிரபாஸ் நடித்த படம் தி ராஜா சாப் நேற்று 9ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டிலும் இந்த படம் ரிலீஸாகி உள்ளது. நேற்று முன் தினம் இரவு தி ராஜா சாப் படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பிரிமியர் காட்சிகள் திரையிடப்பட்டன. அப்போது நடந்த ஒரு வினோதமான சம்பவம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தி ராஜா சாப் படத்தை காண தியேட்டருக்கு வந்த பிரபாஸ் ரசிகர்களில் சிலர் குட்டி முதலையை கையில் எடுத்துக் கொண்டு தியேட்டருக்குள் நுழைந்திருக்கின்றனர். இதை பார்த்து அங்கிருந்த மற்றவர்கள் எல்லாம் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். முதலைகள் என்றாலே பலருக்கும் கை கால்கள் உதறலாகி விடும்.

- Advertisement -

உடனடியாக தியேட்டர் நிர்வாகம் தரப்பில் விசாரிக்கப்பட்ட நிலையில், அவை உண்மையில் முதலைகள் அல்ல ரப்பர் மூலம் செய்யப்பட்ட பொம்மை முதலைகள் என்பது தெரிய வந்தது. தி ராஜா சாப் டிரெய்லரில் வந்த ஒரு காட்சியில் பிரபாஸ் முதலையுடன் சண்டையிடுவது போல் வந்துள்ளது. இதைப் பார்த்து ரசித்த அவரது ரசிகர்கள் முதலை பொம்மையை கையில் எடுத்துக் கொண்டு பிரபாஸ் நடித்த படத்தை பார்க்க தியேட்டர் வந்ததாக கூறப்படுகிறது.

இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலான நிலையில், உங்க அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லையா என்று நெட்டிசன்கள் அவர்களை திட்டியும் கலாய்த்தும் வருகின்றனர். வழக்கமாக ஹீரோ வரும் கேரக்டரை போல மேக்கப் டிரஸ் செய்துகொண்டு ரசிகர்கள் படம் பார்க்க வருவதுதான் வழக்கம். ஆனால் முதலையை கையில் எடுத்துக்கொண்டு தியேட்டருக்கு ரசிகர்கள் சிலர் படம் பார்க்க வந்தது கொஞ்ச நேரம் அங்கிருந்தவர்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்