தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருப்பவர் பவன் கல்யாண். இவர் ஆந்திரா மாநிலத்தின் துணை முதல்வராக உள்ளார். தெலுங்கில் மெகா ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் சிரஞ்சீவியின் சொந்த சகோதரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ராம்சரணுக்கு நடிகர் பவன் கல்யாண் சொந்த சித்தப்பா ஆகிறார்.
கடந்த 25ம் தேதி நடிகர் பவன் கல்யாண் நடித்த ஒஜி என்ற படம் வெளியானது. இந்த படத்தில் பிரியங்கா மோகன் அர்ஜூன் தாஸ் பிரகாஷ் ராஜ் ஸ்ரேயா ரெட்டி இம்ரான் ஹாஸ்மி ஹரிஷ் உத்தமன் அபிமன்யு சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடம் அதிக கவனம் பெற்றது. அதாவது ஓஜி படத்தின் பிரிமியர் ஷோ நடத்தப்பட்ட போது ஒரு ரசிகர்கள் இந்த படத்துக்கான ஒரு டிக்கெட் ரூ. 1.30 லட்சம் கொடுத்து வாங்கியதாக தகவல் பரவி வைரலானது. அதனால் இந்த படம் மாஸ் ஹிட் ஆக இருக்கும் என்று பேசப்பட்டது.
ஆனால் சமீபத்திய நிலவரப்படி ஓஜி படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பவன் கல்யாண் நடித்த ஹரிஹர வீரமல்லு படம் போலவே இந்த படமும் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய ஏமாற்றத்தை தந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
படம் குறித்து முதலில் வெளியான பாசிட்டிவ் விமர்சனங்களுக்கும் படம் பார்த்த பிறகு ரசிகர்கள் தரப்பில் வரும் நெகட்டிவ் விமர்சனங்களுக்கும் பெரிய வித்யாசம் இருக்கிறது. அதிலும் இந்த படத்தில் ஒரு முக்கியமான விஷயம் பவன் கல்யாண் ரசிகர்களை மிகவும் அதிருப்தியடைய செய்துள்ளது. இது ஒரு விதத்தில் ரசிகர்களை ஏமாற்றும் மோசடி வேலை என்றும் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
அதாவது ஓஜி படத்தில் வரும் 40 நிமிட காட்சிகளில் படத்தின் நாயகன் பவன் கல்யாண் நடிக்காமல் டூப் நடிகர் நடித்திருக்கிறார். இது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஏற்கனவே விஎப்எக்ஸ் தொழில்நுட்பத்தில் பல மாய வித்தைகள் திரையில் நடத்தப்படுகிறது. அதிலும் படத்தின் நாயகன் நடிக்காமல் 40 நிமிடங்கள் டூப் நடிகர் நடித்திருப்பது பவன் கல்யாண் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. அதுவே இந்த படத்தை பார்க்கும் ரசிகர்களை விரக்தியடைய செய்வதாக தகவல் பரவி வருகிறது.





