- Advertisement -
Homeபொழுதுபோக்குகதை வறட்சியால் தடுமாறும் தமிழ் சினிமா, ஆக்‌ஷன் ஆக்‌ஷன் என ஸ்டண்ட் மாஸ்டர்களை நம்பி வாழும்...

கதை வறட்சியால் தடுமாறும் தமிழ் சினிமா, ஆக்‌ஷன் ஆக்‌ஷன் என ஸ்டண்ட் மாஸ்டர்களை நம்பி வாழும் இயக்குநர்கள் – கோடிகளில் புரளும் ஹீரோக்கள்

- Advertisement -

சினிமா என்பது கற்பனையில் உருவாக்கப்பட்ட ஒரு பொய்தான். இதில் எதுவுமே உண்மை கிடையாது. நிழல் என்று தெரிந்தும், நிஜமாக நினைத்தால் மட்டுமே சினிமாவை ரசிக்க முடியும். ஹீரோக்கள் எல்லோருமே, அட்டக்கத்தி வீரர்கள்தான். சினிமாவில் அவர்களது நடிப்பு, திறமை என அனைத்துமே வடிக்கட்டிய பொய்களாக இருந்தாலும், சினிமாவை தாண்டிய நிஜங்களாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்வதே, திரைப்படங்களின் வெற்றியாக இருக்கிறது.

ஒரு காலகட்டம் வரை சினிமாவில் குடும்பம், பாசம், காதல், குற்றங்கள், மனித உறவுகளில் சிக்கல்கள், பணம், வறுமை, வேலையில்லாத போராட்டம், கல்வி, சமூக குற்றங்கள், அரசியல் என பல்வேறு விஷயங்கள் இருந்தன. அதனால், மனிதர்களின் பல கேள்விகளுக்கு நேரடியாக, மறைமுகமாக பதில்கள் கிடைத்தன. சினிமா பாடல்கள் தெளிவற்ற மனங்களுக்கு தீர்வு தந்தன. நம்பிக்கை, தெளிவு, வீரம் தந்த பாடல்களும் இருந்தன.

- Advertisement -

குறிப்பாக விசு படங்களில், மிக யதார்த்தமான வாழ்க்கை சூழல்கள் காட்டப்பட்டது. பாலசந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன், பாரதிராஜா, பாசில் உள்ளிட்ட இயக்குநர்களின் படங்களில் வாழ்க்கையில் சகல அம்சங்களும் நிறைந்த விஷயங்கள் திரைப்படங்களாக மக்களுக்கு காட்டப்பட்டன. வி. சேகர் படங்களில் சமூக பொருளாதார பிரச்னைகள், குடும்பங்களில் வறுமை தெளிவாக காட்டப்பட்டது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் சண்டை, சண்டை, சண்டை மட்டுமே பிரதானமாக இருக்கிறது. பழிவாங்கல் சம்பவங்களை அடிப்படையாக கொண்டே பல படங்கள் வருகின்றன. குற்றச் சம்பவங்களை பின்னணியாக கொண்ட படங்களாக வருகின்றன. படத்தின் மைய கருவாக இருப்பது சண்டை காட்சிகள் மட்டுமே.

- Advertisement -

உதாரணமாக கைதி, விக்ரம், ஜெயிலர், லியோ, பீஸ்ட், துணிவு, வலிமை, வாரிசு, அண்ணாத்தே, டாக்டர், புஷ்பா, மாஸ்டர், ஆர்ஆர்ஆர், பாகுபலி, கேஜிஎப், மார்க் ஆண்டனி என, பல படங்களில் பிரதானமாக இருப்பது ஆக்சன், ஆக்சன் மட்டுமே. இப்போது எடுக்கப்பட்டு வரும் விஜய் 68, ரஜினி 170, ரஜினி 171, விக்ரம் 2, கைதி 2 என இனி வரப்போகும் படங்களும் ஆக்சன் படங்களாகவே இருக்கப் போகின்றன.

இப்படி சண்டை படங்களாக இருக்கும்போது அதில் முக்கியத்துவம் பெறுவது, சண்டை பயிற்சியாளர்களான ஸ்டண்ட் மாஸ்டர்கள் மட்டுமே. அங்கு கதை, திரைக்கதை, வசனம் என, படத்தின் இயக்குநர்களுக்கு எந்த வேலையுமே இருக்கப் போவது இல்லை, இதற்கு இதைவிட சிறப்பான சண்டை காட்சிகள் நிறைந்த ஹாலிவுட் படங்களை, வீட்டிலேயே டிவியில் பார்த்துக்கொள்ளலாம்.
இப்படி கதை இல்லாமல், கற்பனை வறட்சியில் ஆக்சன் என்ற பெயர்களில், ஸ்டாண்ட் மாஸ்டர்களை நம்பி, இயக்குநர்கள் காலம் தள்ளும் நிலையே தமிழ் சினிமாவில் நீடிக்கிறது. ஆனால் இந்த டுபாக்கூர் இயக்குநர்களுக்கு, நிழல் ஹீரோக்களுக்கு கோடி, கோடியாக பணத்தை கொட்டிக்கொடுக்கின்றனர் ஏமாளி ரசிகர்கள்.

- Advertisement -

சற்று முன்