- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜயை கடுமையாக விமர்சித்த திரை பிரபலங்கள் - தமிழக முதல்வராகி வெச்சு செய்வாரா தளபதி?...

நடிகர் விஜயை கடுமையாக விமர்சித்த திரை பிரபலங்கள் – தமிழக முதல்வராகி வெச்சு செய்வாரா தளபதி? ஆவலாக காத்திருக்கும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை நடிகர் விஜய் துவங்கிய போது தமிழ் சினிமா சார்ந்த நடிகர் நடிகைகள் பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கவில்லை. இயக்குனர்கள் அட்லி லோகேஷ் கனகராஜ் நெல்சன் திலீப்குமார் போன்ற ஒரு சிலரே வாழ்த்துகளை தெரிவித்தனர். ரஜினி கமல் கூட செய்தியாளர்கள் அதுபற்றி கேட்டதால் வாழ்த்துகள் என்று கூறிவிட்டு நகர்ந்து கொண்டனர்.

வழக்கமாக 33 ஆண்டுகள் சினிமா துறையில் இருந்து விட்டு உச்ச நட்சத்திரமாக சினிமாவை விட்டு வெளியேறிய விஜய்க்கு அவருடன் நடித்த ஏராளமான நடிகர்கள் நடிகைகள் ஆதரவாக இல்லாவிட்டாலும் சக நடிகர் என்கிற முறையில் வாழ்த்துகளை தெரிவித்து இருக்கலாம். ஆனால் ஆளுங்கட்சியாக திமுக இருந்ததால் என்னவோ அவர்கள் யாருமே விஜயை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தினர். ஆனால் விஜயும் அதை பொருட்படுத்தவில்லை.

- Advertisement -

ஆனால் அதே நேரத்தில் திமுக ஆதரவாளர்களாக இருந்த சில நடிகர்கள் சில நடிகைகள் தேவையே இல்லாமல் நடிகர் விஜயை வசைபாடினர். தரக்குறைவாக விமர்சனம் செய்தனர். நடிகர் விஜயை மட்டுமின்றி அவரது ரசிகர்களை தற்குறிகள் என்றும் மட்டமாக விமர்சித்தனர். இது பொதுவாக ரசிகர்களுக்கும் பலத்த எரிச்சலை ஏற்படுத்தியது.

குறிப்பாக நடிகர்கள் சத்யராஜ் அவரது மகள் திவ்யா சத்யராஜ் போஸ் வெங்கட் பிரகாஷ் ராஜ் தயாரிப்பாளர் கே ராஜன் காமெடி நடிகை ஆர்த்தி பிக்பாஸ் ஜூலி என குறிப்பிட்ட சிலர்தான் விஜய் குறித்து தாறுமாறாக விமர்சனம் செய்தனர். அதில் நடிகர் சத்யராஜ், விஜய் நடிக்கவே வேண்டும். அரசியல் எல்லாம் வேண்டாம். அதை எங்கள் தலைவர் ஸ்டாலின் பார்த்துக்கொள்வார் என்று மேடைகளில் நக்கலாக பேசியிருந்தார்.

- Advertisement -

அதே போல் திமுக ஆதரவாளரான நடிகர் போஸ் வெங்கட்டும் தொடர்ந்து விஜய் குறித்து விமர்சனம் செய்தார். அரசியல்வாதிக்கு உரிய எந்த தகுதியும் இல்லாதவர் விஜய். அவரை ரசிகராக நானும் ரசிப்பேன். ஆனால் தலைவராக அவரை ஏற்க முடியாது என்று பல நேர்காணல்களில் விஜயை விமர்சித்திருந்தார்.

காமெடி நடிகை ஆர்த்தி, கவுண்டமணிக்கு 6 மணிக்கு மேல் கண் தெரியாது. அதனால் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார். அதுபோல் விஜயும் 6 மணிக்கு மேல் வெளியே வர மாட்டார். அவருக்கும் ஏதோ பிரச்னை உள்ளது என்றெல்லாம் மட்டம் தட்டி தேர்தல் பிரசாரத்தில் பேசினார். பல படங்களில் விஜயுடன் நடித்த பிரகாஷ் ராஜ், நடிகனுக்காக விசில் அடிக்கலாம். நாட்டை கொடுக்க முடியாது என்று பேசியிருந்தார். இனி தமிழக முதல்வராகும் விஜய், இவங்களுக்கு எல்லாம் ஆப்பு காத்திருக்கு என்று தளபதி ரசிகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்