- Advertisement -
Homeபொழுதுபோக்கு70 படங்களில் நடிச்சும் ஒரு தேசிய விருது கூட வாங்க முடியலே, இவர் பெரிய நடிகரா?...

70 படங்களில் நடிச்சும் ஒரு தேசிய விருது கூட வாங்க முடியலே, இவர் பெரிய நடிகரா? – தமிழக முதல்வரை விளாசித் தள்ளிய முன்னாள் முதல்வர்!

- Advertisement -

கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தாராபுரம் தொகுதி எம்எல்ஏ சத்யபாமா மற்றும் மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல் ஆகிய இருவரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக கட்சிக்கு சென்ற நிலையில், அந்த தொகுதிகளுக்கு வருகிற 6ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

அதே தொகுதிகளில் தவெக வேட்பாளர்களாக இப்போது சத்யபாமா மரகதம் குமரவேல் இருவரும் நிறுத்தப்பட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த முறையே தவெக வேண்டாம் என்று தீர்மானித்து தான் இந்த தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களாக நின்ற அவர்களை தொகுதி மக்கள் ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்தனர்.

- Advertisement -

அந்த அடிப்படை தெளிவு கூட இல்லாமல் இப்போது தவெக வேட்பாளர்களாக ராஜினாமா செய்த அவர்களையே மீண்டும் விஜய் நிறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. விஜய் மீதான அதிருப்தி தவெக ஆட்சி மீதான வெறுப்பு ஓட்டுப் போட்ட மக்களை ஏமாற்றிய துரோகம் என இரண்டு தொகுதிளை சேர்ந்த மக்களும் தவெக வேட்பாளர்களை விரட்டியடித்து வருவது குறிப்பிடத்கக்கது.

இந்த நிலையில் அந்த தொகுதிகளில் திமுக அதிமுக இடதுசாரிகள் நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி தேர்தலில் ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சியுடன் இந்த 4 கட்சிகளின் வேட்பாளர்களும் களத்தில் நிறுத்தப்பட்ட நிலையில் அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி திமுக தரப்பில் உதயநிதி ஸ்டாலின் நாம் தமிழர் கட்சி சீமான் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகிகள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

மதுராந்தகத்தில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், 70 படங்களில் நடித்த விஜய் ஒரு தேசிய விருதை கூட வாங்க முடியவில்லை. தமிழ்நாட்டில் இருந்து எத்தனையோ நடிகர்கள் தேசிய விருது வாங்கியுள்ளனர்.

சினிமாவிலேயே பாஸ் ஆகாத விஜய் அரசியலில் எப்படி பாஸ் ஆவார்? என்று கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் கமர்ஷியல் ஹீரோவாக லாபம் தந்த ஒரு நடிகராக இருந்தாரே தவிர நடிகர்கள் கமல் சியான் விக்ரம் போல ஒரு சிறந்த நடிப்பாற்றல் கொண்ட நடிகர் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

- Advertisement -

சற்று முன்