- Advertisement -
Homeபொழுதுபோக்குஃபர்ஸ்ட் லுக் தான் ரிலீஸ் ஆச்சு... அதற்குள்ளேயும் கோடி கோடியாய் சம்பாதித்த குட் பேட் அக்லி......

ஃபர்ஸ்ட் லுக் தான் ரிலீஸ் ஆச்சு… அதற்குள்ளேயும் கோடி கோடியாய் சம்பாதித்த குட் பேட் அக்லி… கெத்து காட்டிய அஜித்… காலரை தூக்கிவிடும் ரசிகர்கள்…

- Advertisement -

அஜித் தற்போது குட் பேட் அக்லி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான ஆதிக் ரவிச்சந்திரன் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கில் புகழ்பெற்ற மைத்திரி மூவிஸ் நிறுவனம், இந்த திரைப்படத்தை தயாரிப்பதன் மூலம் முதல் முறையாக தமிழ் சினிமாவுக்கு அடி எடுத்து வைக்கிறது.

 

வீரம் திரைப்படத்தை தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தின் கதையை, நேர்கொண்ட பார்வை ஷூட்டிங்கின்போது ஆதிக் ரவிச்சந்திரன் கூறியிருக்கிறார். அஜித்திற்கு அந்த கதை பிடித்து போனாலும், ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ஒரு பெரிய வெற்றி தேவைப்பட்டது.

 

இதனையடுத்து அவர், விஷாலை வைத்து மார்க் ஆண்டனி படத்தை எடுத்தார். இதில் எஸ்ஜே சூர்யாவுக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. டைம் ட்ராவல் அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

 

மிக சிக்கலான கதையை எந்தவித குழப்பமும் இன்றி ரசிகர்களுக்கு தெளிவாக காட்சிப்படுத்தியதால் பாராட்டைப் பெற்றார் ஆதிக் ரவிச்சந்திரன். எஸ் ஜே சூர்யாவும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல்களை வாங்கினார். இதன் காரணமாக மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது.

 

இந்த நிலையில் தான் அவருக்கு அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாக வேண்டும் என்பதால், பரபரப்பாக தனது வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன். இதற்கான முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

 

சமீபத்தில், படத்தின் போஸ்டர் வெளியானது. அதில் மூன்று கெட்டப்புகளில் அஜித் குமார் அசத்தினார். கலர் கலரான சட்டை, உடல் முழுவதும் டாட்டூ, நடு விரலை காட்டும் நக்கல் என்று மொத்தமாக அஜித் மாறி இருந்தார். இந்த போஸ்டர் கிட்டத்தட்ட எக்ஸ் வலைத்தளத்தில் 41 மில்லியன் பார்வையைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படியான சூழலில் குட் பேட் அக்லி திரைப்படத்தை, netflix திரைப்படம் 95 கோடி ரூபாய்க்கு உரிமம் பெற்றுள்ளது.

சற்று முன்