- Advertisement -
Homeபொழுதுபோக்குபிஜேபியில் இருந்து தேடி வரும் பதவி, தேசிய அளவில் செயல்படப்போகும் ஜிவி பிரகாஷ், அமித்ஷாவை சந்திச்சது...

பிஜேபியில் இருந்து தேடி வரும் பதவி, தேசிய அளவில் செயல்படப்போகும் ஜிவி பிரகாஷ், அமித்ஷாவை சந்திச்சது வீண் போகல போலயே?

- Advertisement -

9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள பாஜக ஆட்சியின் சாதனைகளை குறித்து விளக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா சமீப நாட்களாக பல மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த 11 ஆம் தேதி தமிழகத்திற்கு வந்திருந்தார்.

சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த அமித்ஷாவை பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்கள் சந்தித்தனர். அதில் சினிமாத்துறையில் இருந்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், தயாரிப்பாளர்களான அபிராமி ராமநாதன், ஐசரி கணேஷ், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி போன்ற பலரும் சந்தித்தனர்.

- Advertisement -

இதில் ஜிவி பிரகாஷ் குமார் அமித்ஷாவை சந்தித்த போது, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் தமிழ் இனத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தாராம். மேலும் புதிய கல்வி கொள்கை குறித்தும் அமித்ஷாவிடம் பேசியதாக கூறப்படுகிறது.

ஜிவி பிரகாஷ் குமார் அமித்ஷாவை சந்தித்ததில் இருந்து அவர் பிஜேபியில் இணையவுள்ளார் என்று பலரும் கூறி வருகின்றனர். எனினும் ஜிவி பிரகாஷ் இது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன், ஜிவி பிரகாஷ் குறித்த ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

- Advertisement -

அதாவது ஜிவி பிரகாஷ் குமாருக்கு பாஜக தலைமை அகில இந்திய அளவில் சினிமா சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய பொறுப்பை தர உள்ளார்களாம். ஆனால் அது கட்சி சார்ந்த பொறுப்பாக இருக்க வாய்ப்பில்லையாம். சினிமா சம்பந்தப்பட்ட ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அந்த அமைப்பிற்கு ஜிவி பிரகாஷ் குமாரை தலைவராக நியமிக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம். இவ்வாறு ஒரு தகவலை அந்தணன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்