தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஜிவி பிரகாஷ் குமார். “வெயில்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிவி பிரகாஷ், தனது முதல் திரைப்படத்திலேயே மாஸ் ஆன ஆல்பமை கொடுத்திருந்தார். அதன் பின் அவரின் புகழ் எங்கோ போனது. “வெயில்” திரைப்படத்தை தொடர்ந்து பல இயக்குனர்கள் அவரது ஸ்டூடியோவில் வரிசை கட்டி நிற்க தொடங்கிவிட்டனர்.

“அங்காடித் தெரு”, “ஆயிரத்தில் ஒருவன்”, “மதராஸபட்டணம்” போன்ற பல திரைப்படங்களுக்கு சிறந்த பாடல்களை தந்த ஜிவி பிரகாஷ் ஒரு கட்டத்திற்கு பிறகு கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். “டார்லிங்” திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கிய ஜிவி பிரகாஷ் “திரிஷா இல்லைன்னா நயன்தாரா”, “சர்வம் தாள மயம்”, “சிவப்பு மஞ்சள் பச்சை”, “பேச்சுலர்”, “ஜெயில்” போன்ற பல திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். தற்போது “இடி முழக்கம்”, “கள்வன்”, “டியர்” போன்ற திரைப்படங்களில் ஜிவி பிரகாஷ் நடித்து வருகிறார்.
ஜிவி பிரகாஷ் ஹீரோவாக ஆன போது தற்போது பல திரைப்படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். இந்த நிலையில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா “மார்கழி திங்கள்” என்ற புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தில் பாரதிராஜாவே நடிக்க உள்ளார். முதலில் இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமாரை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருந்தனராம்.

ஆனால் என்ன காரணமோ, இந்த படத்தில் இருந்து ஜிவி பிரகாஷ் குமாரை நீக்கிவிட்டார்களாம். பாரதிராஜா இயக்கிய பல திரைப்படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவையே இசையமைக்க வைக்கலாம் என முடிவு செய்தார்களாம். இளையராஜாவும் அதற்கு ஒப்புக்கொள்ள, இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.





