வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ். அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், ஆடுகளம் பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் பேசப்பட்டார். அசுரன் திரைப்படத்திற்காக அவர் தேசிய விருதையும் வாங்கி இருக்கிறார்.
இப்படி இசையமைப்பில் கலக்கி வரும் ஜீவி பிரகாஷ், சமீபத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பணியாற்றி இருந்தார். இது குறித்து பேசி இருக்கும் அவர், அந்த திரைப்படத்திற்காக தனது மாமா ஏ ஆர் ரகுமான் போனில் அழைத்து பாராட்டியதாக குறிப்பிட்டார்.
தனது இத்தனை வருட இசை பயணத்தில் அவர் தன்னை பாராட்டியதே இல்லை என்றும், முதன்முறையாக கேப்டன் மில்லர் படத்திற்காக அவரிடம் இருந்து வாழ்த்து பெற்றதாகவும் ஜிவி பிரகாஷ் கூறி நெகிழ்ச்சி அடைந்தார். இசையமைப்பு மட்டுமல்ல திரைப்படங்களின் நடிப்பதிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
டார்லிங் திரைப்படத்தின் மூலம் அவர் கதாநாயகனாக அறிமுகமானார். அவருக்கு சில படங்கள் க்ளிக் ஆகியதால், தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தது. குறுகிய காலத்திலேயே அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்து விட்டார். இதில் பேச்சுலர் உள்ளிட்ட திரைப்படங்கள் சொல்லிக் கொள்ளும் வகையில் அமைந்தது.
சமீபத்தில் அவரது நடிப்பில், அடியே என்னும் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த நிலையில் டியர், இடி முழக்கம், கள்வன் உள்ளிட்ட திரைப்படங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன. ரெபெல் திரைப்படத்தின் ட்ரெய்லர் நன்றாக இருந்த நிலையில் வரும் வெள்ளிக்கிழமை அந்த திரைப்படம் வெளியாகியிருக்கிறது.
இப்படியான சூழலில் இந்தி திரையுலகிற்கு ஜிவி பிரகாஷ் நடிகராக செல்கிறார். இந்தத் திரைப்படத்தை, புகழ்பெற்ற இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்குகிறார். இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி ரசிகர்களை மிரட்டி இருந்த அனுராக், லியோ திரைப்படத்திலும் ஒரு காட்சியில் நடித்திருந்தார். இப்படியான சூழலில் அவர் இயக்கத்தில் ஜிவி நடிப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் இந்தி என இரண்டு மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகிறது.





