- Advertisement -
Homeபொழுதுபோக்குராசா நீயுமா லேட்டு? ஸ்டுடியோ வாசலில் நின்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கேட்ட நறுக்...

ராசா நீயுமா லேட்டு? ஸ்டுடியோ வாசலில் நின்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கேட்ட நறுக் கேள்வி – அதற்கு இசைஞானி சொன்ன நச் பதில்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிப்பு பல்கலைக்கழகம் என்று போற்றப்பட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவரது மூத்த மகன் ராம்குமார் திரைப்பட தயாரிப்பாளராக இருக்கிறார். இளைய மகன் பிரபு, பல ஆண்டுகளாக சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் சினிமாவில் நடித்து வரும் நிலையில், ராம்குமாரின் மகனும் இப்போது சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார்.

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமாரின் மகன், அதாவது சிவாஜியின் பேரன் தர்ஷன் கணேசன், லெனின் பாண்டியன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் இசையமைப்பாளர் கங்கை அமரன் நடிகை ரோஜா முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். நாளை இந்த படம் திரைக்கு வர உள்ளது.

- Advertisement -

இந்த படத்தை இயக்குனர் டிடி பாலச்சந்திரன் டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தில் தர்ஷன் கணேசன் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்துள்ளார். சமீபத்தில் லெனின் பாண்டியன் பட விழா நடந்தது. அந்த விழாவில் பங்கேற்ற இசைஞானி இளையராஜா பேசியதாவது, சிவாஜி அண்ணா சொல்லுவாங்க. ஒருநாள் வந்து நான் 7.05 க்குதான் ஸ்டுடியோவுக்கு போனேன்.

வழக்கமாக நான் 7 மணிக்கு ஸ்டுடியோவுக்கு போயிடுவேன். என் ரூம்ல இருப்பேன். அன்னிக்கு 5 நிமிடம் லேட்டாகிடுச்சு. கார்ல இருந்து இறங்கும் போது சிவாஜி அண்ணா நிற்கறாங்க. பக்கத்துல டப்பிங் பேச வந்தவங்க நிற்கறாங்க. என்னை ராஜான்னு கூப்பிட மாட்டார். ராசா என்றுதான் கூப்பிடுவார். ராசா நீயுமா லேட்டு? என்றார். நீங்க 25 வருஷம் முன்னாடி வந்துட்டு என்னை லேட்டுன்னு சொல்றீங்களா என்று கேட்டேன்.

- Advertisement -

அண்ணா என்கிட்ட சொல்லுவார். ஒரு படத்துல டேய் ஒரு சமாச்சாரம். ஒரு படத்துல ஒருத்தன் அறிமுகம் ஆகிறானா டேய் யார்ரா இவன் அப்படீன்னு ஆடியன்ஸ் கேட்கணும்.அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு படத்துல போர் அடிக்கிற சீன் பண்ணினான் என்றால் யார்டா இவன் என்று சற்று சலிப்பாக கேட்பார்கள். ஒரே வார்த்தை தான்.

அப்புறம் கடைசியில் ரொம்பவும் மோசமாக நடிக்கிறான் என்றால் மக்கள் எரிச்சலாக யார்ரா இவன் என்று கேட்பார்கள். அப்படி யாரும் சொல்லாத மாதிரி நடிக்கணும். இதெல்லாம் பெரியவர் என்கிட்ட சொன்ன கலைகள். நானும் இதில் சிவாஜி பேரன் நடிப்பை பார்த்தேன். அண்ணனோட பேரை வம்சாவழி பேரை காப்பாத்த மாதிரி மிக சிறப்பாக நடிச்சிருக்கார். எல்லா வளமும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறேன் என்று இளையராஜா அந்த விழாவில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்