நடிகர் வெற்றி நடிகை வாணி போஜன் நடிக்கும் ரேவன் படம் குறித்து இயக்குனர் வெற்றிவேல் சந்திரசேகர் கூறியதாவது, ரேவன் ஒரு க்ரைம் திரில்லர் படம். எழுத்தாளர் நந்தன் ஸ்ரீதரன் எழுதிய படுகளக் காதை நாவலை தழுவி இந்த படத்திற்கான கதையை உருவாக்கி இருக்கிறேன். குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் சுமார் 30 கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளுடன் தொடர்புடையதாக கூறப்பட்ட ஒரு தொடர் கொலையாளி கைது செய்யப்பட்ட உண்மை சம்பவத்தின் தாக்கமும் இந்த திரைக்கதையின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. அந்த உண்மை சம்பவத்தை அப்படியே பதிவு செய்யாமல் அதன் தாக்கத்தின் ஒரு விறுவிறுப்பான க்ரைம் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறோம். நமது சமூகத்தில் நீண்ட காலமாக புரையோடி போயிருக்கும் ஒரு முக்கியமான சமூக பிரச்சனையையும் ரேவன் படம் அழுத்தமாக பேசுகிறது என்று இயக்குனர் வெற்றிவேல் சந்திரசேகர் கூறியிருக்கிறார்.





