நடிகர் சிம்புவிற்கு கடைசியாக கடந்த ஆண்டு பத்து தல திரைப்படம் வெளியாகி இருந்தது. கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.
இதன் பிறகு சிம்புவின் படம் குறித்த அறிவிப்பு வெளியாக தாமதமானது. ஒரு வழியாக ஜூலை மாதம் அதன் அறிவிப்பு வெளியானது. கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அவர் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது.
தேசிங்கு பெரியசாமி ஏற்கனவே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்னும் மிகப்பெரிய ஹிட் திரைப்படத்தை கொடுத்தவர். அதற்கு அடுத்ததாக ரஜினியை வைத்து அவர் படம் இயக்குவதாக இருந்தது. ஆனால் அது சரியான நேரத்தில் ஒத்து வராததால், சிம்புவிடம் கதை கூறி அதனை ஓகே செய்தார்.
வரலாற்று பின்னணியில் இந்த திரைப்படம் உருவாகிறது. ஆனால் இந்த திரைப்படம் அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகியும் அடுத்த கட்ட அப்டேட் குறித்த தகவல் வெளியாகவில்லை. இதனால் தேசிங்கு பெரியசாமி சிம்பு படம் கைவிடப்பட்டதாகவே பலரும் கூறி வந்தனர்.
இப்படியான சூழலில் சமீபத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. படத்தில் இரண்டு சிம்பு நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் முடிவடைந்துள்ள சூழலில், சூட்டிங் நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. இப்படியான சூழலில் சிம்புவின் கொரோனா குமாரு திரைப்படம் விஷ்ணு விஷால் இடம் சென்று இருப்பது உறுதியாகியிருக்கிறது.
கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் திரைப்படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு எடுக்கப்படுவதாக இருந்தது. ஆனால், சில பல பிரச்சினைகளால் அது தடைப்பட்டு போக இப்போது தயாரிப்பு நிறுவனம் கதாநாயகனை மாற்றியுள்ளது. அதன்படி விஷ்ணு விஷால் மற்றும் அதிதி சங்கர் இந்த திரைப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதேபோல் படத்திற்கும் vibe குமார் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.





