- Advertisement -
Homeபொழுதுபோக்குதேர்தல் நேரத்தில் இப்படியா? இணையத்தில் துண்டு துண்டாக வெளியான ஜனநாயகன் படக் காட்சிகள் - தளபதி...

தேர்தல் நேரத்தில் இப்படியா? இணையத்தில் துண்டு துண்டாக வெளியான ஜனநாயகன் படக் காட்சிகள் – தளபதி ரசிகர்கள் விரக்தி!

- Advertisement -

பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த படம் ஜனநாயகன். இந்த படம்தான் தனது கடைசி படம் என விஜய் 2 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்த நிலையில் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்பட்டது. கடந்த ஜனவரி 9ம் தேதி பொங்கல் ரிலீஸ் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் சென்சார் பிரச்னை காரணமாக இந்த படம் திரைக்கு வரவில்லை. பிறகு கோர்ட் வழக்கு என பல பிரச்னைகளுக்கு பிறகு சமீபத்தில்தான் இந்த படத்தை மும்பையில் சென்சார் அதிகாரிகள் படம் பார்த்து அனுமதி வழங்கினர். ஆனால் தேர்தல் நடைமுறை விதிகள் அமலுக்கு வந்ததால் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை.

- Advertisement -

இந்நிலையில் நேற்று ஜனநாயகன் படத்தின் சண்டை காட்சி பாடல் காட்சி என 5 நிமிட காட்சிகள் வெளியானது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிறகு படத்தின் பல காட்சிகள் இப்படி துண்டு துண்டு காட்சிகளாக இணையத்தில் லீக் ஆன நிலையில் தவெக கட்சியினரும் விஜய் ரசிகர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

ஜனநாயகன் படத்தை தேர்தலுக்கு பிறகு தியேட்டர்களில் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. இப்படி துண்டு துண்டு காட்சிகளாக படத்தை செல்போன்களில் பார்க்கும் ரசிகர்கள் பயங்கர எரிச்சலும் அதிருப்தியும் அடைகின்றனர்.

- Advertisement -

ஏற்கனவே தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி என்ற படத்தின் ரீ மேக்தான் ஜனநாயகன். இதில் பாலகிருஷ்ணா கேரக்டரில்தான் விஜய் நடித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த சூழலில் படத்தின் காட்சிகள் இப்படி துண்டு துண்டாக பார்க்கப்பட்டால் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் எடுத்த படம் கணிசமான வருவாய் இழப்பை சந்திக்கவும் அதிக வாய்ப்புள்ளது.

சென்சார் அதிகாரிகள் குழு மற்றும் படக்குழு சார்ந்தவர்கள் மட்டுமே இந்த படத்தை பார்த்த நிலையில் இப்படி முழு படத்தையும் செல்போனில் படம் பிடித்து இணையத்தில் லீக் செய்தது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இப்படி விஜயின் கடைசி படத்தை திரையிலும் பார்க்க முடியாமல் செல்போனில் துண்டு துண்டு காட்சிகளாக கசிய விட்டு படத்துக்கான இமேஜையே கெடுத்து விட்டார்களே என தளபதி ரசிகர்கள் புலம்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்