- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படம் ரிலீஸ் இப்போதைக்கு வாய்ப்பில்லே, சென்சார் போர்டு அப்படி சொல்லிவிட்டதா? - அப்செட் ஆன...

ஜனநாயகன் படம் ரிலீஸ் இப்போதைக்கு வாய்ப்பில்லே, சென்சார் போர்டு அப்படி சொல்லிவிட்டதா? – அப்செட் ஆன தயாரிப்பு நிறுவனம்!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இதுவரை திரைக்கு வராமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது, சென்சார் போர்டு தரப்பில் படத்துக்கு இன்னும் சான்றிதழ் வழங்கப்படாமல் இடையூறு செய்வதால் இந்த படம் திரைக்கு வருவதில் தொடர்ந்து தாமதமும் ஏமாற்றமும் நீடித்து வருகிறது.

ஜனநாயகன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு மே மாதம் முன்னதாகவே முடிந்து விட்டது. அதன்பிறகு தீபாவளிக்கே இந்த படத்தை வெளியிட்டு இருக்கலாம். அல்லது சென்சார் போர்டில் முன்னதாக சான்றிதழ் பெற படத்தின் தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்திருக்கலாம். அதில் காட்டிய கவனக்குறைவும் அலட்சியமும் இன்று வரை பாதிப்பை தந்து வருகிறது.

- Advertisement -

இதற்கிடையே ஜனநாயகன் படம் சில வாரங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி விட்டது. அதனால் படத்தை பலரும் பார்த்து விட்டனர். அத்துடன் கோவைக்கு அருகில் உள்ள கருமத்தம்பட்டியில் லோக்கல் டிவி சேனலில் படத்தையே முழுமையாக ஒளிபரப்பியும் விட்டனர். அந்த கேபிள் ஆபரேட்டரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் இணையத்தில் ஜனநாயகன் படத்தை லீக் செய்த வகையில் உதவி எடிட்டர் பிரசாத் உட்பட 9 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்படுத்த எடிட்டர் ஒருவரும் எடிட்டர் சங்கத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு அவர் காரணமில்லை என்றாலும் இந்த தவறு நடக்க அவரது அலட்சியம் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த சூழலில் தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில் வருகிற 30ம் தேதி அல்லது மே முதல் வாரத்தில் ஜனநாயகன் படம் ரிலீஸாகும் என்ற நம்பிக்கையில் தளபதி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஏற்கனவே கடந்த மார்ச் 15ம் தேதி ஜனநாயகன் படத்தை சென்சார் குழு பார்த்து விட்டது. ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதை காரணம் காட்டி சான்றிதழ் தர மறுத்துவிட்டது.

இப்போது ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சான்றிதழ் கேட்டு அணுகிய போது, மீண்டும் ஒருமுறை நாங்கள் படத்தை பார்க்க வேண்டும். அதன்பிறகுதான் சான்றிதழ் தரப்படும் என்று கூறியிருக்கின்றனர். அதனால் இன்னும் சான்றிதழ் தராமல் இழுத்தடிக்கும் சூழல் நீடிப்பதால் ஜனநாயகன் படம் இப்போதைக்கு திரைக்கு வராது என்பது உறுதியாகி விட்டது. ஒருவேளை அதிமுக அல்லது திமுக ஆட்சி அமைந்தால், விஜய் மீதான காழ்ப்புணர்ச்சியில் இந்த படத்தை மொத்தமாக முடக்கி விடுவார்களோ என்ற அச்சமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்