- Advertisement -
Homeபொழுதுபோக்குநேற்று இரவு கடைசி நேரத்தில் நடந்தது இதுதான்.. லியோ இசை வெளியீட்டு விழா ரத்து குறித்து...

நேற்று இரவு கடைசி நேரத்தில் நடந்தது இதுதான்.. லியோ இசை வெளியீட்டு விழா ரத்து குறித்து பிரபலம் வெளியிட்ட சீக்ரெட்

- Advertisement -

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அதற்கான பாஸ்களும் வழங்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் திடீரென இசை வெளியீட்டு விழா நடக்காது என தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் நேற்று இரவு அறிவித்தது. அந்த அறிவிப்பை பார்த்த விஜய் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதற்கு பின்னால் கண்டிப்பாக அரசியல் அழுத்தம்தான் இருக்கும் என ஒருதரப்பினர் தொடர்ந்து கூறிவருகின்றனர்.

இந்நிலையில் பத்திரிகையாளர் பிஸ்மி இதுகுறித்து அளித்த ஒரு பேட்டியில், “லியோ இசை வெளியீட்டு விழா ரத்தானது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கலாம். ஆனால் எனக்கு இந்த அறிவிப்பு வேறு மாதிரியான ஒரு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அது என்னவென்றால், லியோ இசை வெளியீட்டு விழா ரத்து என்றுதான் தயாரிப்பு நிறுவனம் சொல்லியிருக்க வேண்டுமெயொழிய ஆடியோ லான்ச் நடக்காது என்று சொல்லியிருக்கக்கூடாது. அப்படி அவர் அறிவித்தது ஏன் என்று தெரியவில்லை.

- Advertisement -

நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் லியோ இசை வெளியீட்டு விழாவுக்கான மேடை அமைக்கும் பணி நடந்துகொண்டுதான் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் படத்தின் தயாரிப்பாளர் லலித் மற்றும் உயர் காவல் துறை அதிகாரிகள் அந்த இடத்தில் சந்தித்து விஐபிக்கள் வரும் வழி, பார்வையாளர்கள் வரும் வழி, பார்க்கிங் வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தியிருக்கின்றனர்.

இந்த விழாவை ரத்து செய்ததற்காக அவர்கள் சொல்லும் காரணம் ரொம்பவே வேடிக்கையாக இருக்கிறது. நிறைய கூட்டம் வரும், ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் விஜய்க்கு கெட்ட பெயர் என்று சொல்கிறார்கள். இதனை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இந்த நிகழ்ச்சி திடீரென ரத்தானதற்கு பிறகு கண்டிப்பாக ஏதோ அரசியல் அழுத்தம் காரணமாக இருந்திருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

- Advertisement -

இருந்தாலும் உதயநிதி ஸ்டாலின் இந்தத் திட்டத்தில் விஜய்யுடன் மல்லுக்கு நிற்கமாட்டார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அதேபோல் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இந்தப் படத்துக்கு எதிரான வேலையில் இறங்கியிருக்கமாட்டார்கள். இருந்தாலும் இந்தப் படத்துக்கு வந்திருக்கும் அழுத்தம் திமுக தரப்பிலிருந்து வந்த அழுத்தமாக இருக்கலாம் என்பதுதான் என்னுடைய கணிப்பு. ஏனெனில் விஜய் அரசியலுக்கு வருவதாக சமீபகாலமாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த ஆடியோ வெளியீட்டு விழா மேடையை அரசியல் மாநாடாக பயன்படுத்தப்போகிறார் என்றும் பலரால் கருதப்பட்டது. எனவே இந்த விஷயம் நடந்திருக்கலாம்” என்றார்.

- Advertisement -

சற்று முன்