- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஸ்வந்த் அந்த ஒன்லைனை கூறியதும் லாக் செய்து விட்டோம்... எஸ்டிஆர் 51ஆவது திரைப்படத்தின் ரிலீஸ் தேதியையும்...

அஸ்வந்த் அந்த ஒன்லைனை கூறியதும் லாக் செய்து விட்டோம்… எஸ்டிஆர் 51ஆவது திரைப்படத்தின் ரிலீஸ் தேதியையும் கணித்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி…

- Advertisement -

பத்து தல திரைப்படத்தை தொடர்ந்து சிலம்பரசன் தற்போது, தக் லைப் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். மணிரத்னம் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரிஷா, அபிராமி, நாசர், அசோக் செல்வன் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

வரும் ஜூன் மாதம் தக் லைப் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து சிலம்பரசன் தனது அடுத்த அடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி இருக்கிறார். அவரது 49வது திரைப்படத்தை எடுக்கிறார் பார்க்கிங் இயக்குனர் ராம்குமார்.

- Advertisement -

இதில் சிம்பு பொறியியல் கல்லூரி மாணவராக நடிக்கிறார். அதே சமயம் அவருக்கு கேங்ஸ்டர் கதாபாத்திரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. கல்லூரி மாணவர் கேங்ஸ்டராக இருப்பது படத்தின் போஸ்டரிலேயே தெரிவிக்கப்பட்டு இருந்ததால், இதன் மீது ஆரம்பத்திலேயே ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இட்லி கடை பராசக்தி படங்களை தயாரித்து வரும் ஆகாஷ் பாஸ்கரன்தான், இந்த படத்தையும் தயாரிக்கிறார். இதனைத் தொடர்ந்து சிலம்பரசனின் ஐம்பதாவது படத்தை இயக்குகிறார் தேசிங்கு பெரியசாமி. ஏற்கனவே கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்து பின்னர் கைவிடப்பட்ட இந்த திரைப்படத்தைதான் தற்போது சிம்பு கையில் எடுத்திருக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாகிறது.

- Advertisement -

இதனை ஏஜிஎஸ் நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் சிலம்பரசனின் 51வது திரைப்படத்தையும், ஏஜிஎஸ் நிறுவனம் தான் எடுக்கிறது. ஓ மை கடவுளே, டிராகன் திரைப்படங்களை இயக்கியிருக்கும் அஸ்வந்த் மாரிமுத்து, இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.

இது குறித்து பேசி இருக்கும் கல்பாத்தி அர்ச்சனா, ஓ மை கடவுளே படம் முடிந்த உடனேயே, இந்த திரைப்படத்தின் ஒன்லைன் கதை குறித்து அஸ்வந்த் என்னிடம் கூறினார். எனக்கு மிகவும் பிடித்துப் போனதால் அதனை லாக் செய்து விட்டேன். இது ஒரு பேண்டஸி திரைப்படம். சிலம்பரசன் இதில் நடிக்கிறார். வரும் ஆகஸ்ட் மாதம் நாங்கள் சூட்டிங் செல்ல திட்டமிட்டுள்ளோம். இது மட்டும் சரியாக நடைபெற்றால், அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இந்த திரைப்படம் வெளியாகி விடும் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்