அஜீத்குமார் நடித்த அமர்க்களம் படத்தில் காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா என்ற பாடல் காட்சியில் நடனமாடி ரசிகர்களுக்கு அறிமுகமானவர் டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ். பிறகு பார்த்ததேன் ரசித்தேன் ஸ்டைல் அற்புதம் உள்ளிட்ட படங்களில் நடித்து நடிகராக ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். ஆனால் அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது முனி படம்தான்.
ராஜ்கிரண் பிரதான கேரக்டரில் நடித்த முனி படத்தில் ராகவா லாரன்ஸ் வேதிகா வினுசக்ரவர்த்தி கோவை சரளா காதல் தண்டபாணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இதில் ராஜ்கிரணின் ஆவி ராகவா லாரன்ஸ் உடம்புக்குள் புகுந்து வில்லன்களை பழிவாங்குவதுதான் கதை.
இந்த படம் பெரிய வரவேற்பை வெற்றியை பெற்ற நிலையில், இதே திகில் கதை பாணியில் அடுத்தடுத்து காஞ்சனா காஞ்சனா 2 காஞ்சனா 3 ஆகிய திரில்லர் பேய் கதை படங்களை தந்த மாஸ்டர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் இப்போது காஞ்சனா 4 படம் உருவாகி வருகிறது.
காஞ்சனா 4 படத்தில் முக்கிய வேடத்தில் பூஜா ஹெக்டே நடிக்கிறார். சென்னை பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் ஷூட்டிங் நடத்தப்பட்ட நிலையில் இப்போது ஐதராபாத்தில் காஞ்சனா 4 ஷூட்டிங் நடந்து வருகிறது. இதையடுத்து மும்பையில் அடுத்த கட்ட ஷெட்யூல் ஷூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் ஒரு மாதம் வரை மும்பையில் படக்குழு தங்கி காஞ்சனா படத்தின் முக்கிய காட்சிகள் படப்பிடிப்பு செய்யப்படுகின்றன. ஆனால் மும்பைக்கு செல்லும் முன்பாக ஐதராபாத்தில் நடந்த வரும் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு, மீண்டும் சென்னையில் 15 நாட்கள் காஞ்சனா 4 ஷூட்டிங் நடத்தப்பட உள்ளது. அதற்கு பிறகே மும்பைக்கு படக்குழு செல்ல உள்ளது.
சென்னையில் 15 நாட்கள் நடக்கும் படப்பிடிப்பில் 6 நாட்கள் மட்டுமே ஒரு பிரமாண்ட சண்டைக்காட்சி எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அநேகமாக இது படத்தின் கிளைமாக்ஸில் வில்லனுக்கும் கதாநாயகனுக்கும் நடக்கும் ஆக்ரோஷமான சண்டைக்காட்சியாக இருக்கவும் அதிக வாய்ப்புள்ளது. இந்த சண்டைக்காட்சிக்கு பிறகே மும்பைக்கு காஞ்சனா 4 படக்குழு செல்ல உள்ளது என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





